Tuesday, October 1, 2013

எல்லா வியாதிக்கும் ஒரு மருந்து இருக்காய்யா?

திரிபலா

இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும். உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும். முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

திரிபலா என்றால் என்ன?

திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.

திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?

திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.

எப்பவும் யூத்தா இருக்கனுமா?

இளமையை தக்கவைக்கும் தூதுவளைப் பூக்கள்:-

தூதுவளை செடியைப் போல தூதுவளை பூக்களும் உடலுக்கு நன்மை தரும் மருத்துவ குணம் கொண்டதாகும். சித்தமருத்துவத்தில் தூதுவளையின் பங்கு முக்கியமானது. இது காயகல்ப மருந்து என்று அழைக்கப்படுகிறது.


இளமையை தக்க வைக்க

வயதானலும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தூதுவளைப் பூக்கள் வரப்பிரசாதமாகும். தினம் இரண்டு பூக்களை எடுத்து மென்று தின்று வர உடல் பளபளப்பாக மாறும். என்றும் இளமை நீடிக்கும்.

தூதுவளைப் பூக்களை 15 எடுத்து 200 மில்லி லிட்டர் நீரில் போட்டு பாதியாகச் சுண்டக்காய்ச்சி பாலும் சர்க்கரையும் கலக்கிப் பருகினால் முக அழகு கிடைக்கும்.

உடல் வலுவடையும்

தூதுவளைப்பூக்களை நெய் விட்டு வதக்கி தயிர் சேர்த்து பச்சடி போல செய்து சாப்பிட ருசியாக இருக்கும், உடல் வலுவடையும். தூதுவளைப் பூக்களைச் சேகரித்து நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்த வேண்டும். ஒரு டீஸ்பூன் பூவை காய்ச்சிய பசும்பாலில் போட்டு சிறிது சர்க்கரை சேர்த்து இரவில் ஒருவேளை மட்டும் அருந்தவும். இதனால் நரம்புகள் இறுகும். உடல் உறுதி பெறும். ஆண்மை பெருகும்

பேரிக்காய் நியாபகம் இருக்கிறதா?

இதயப் படபடப்பு நீங்கிட உதவும் பேரிக்காய்..!

அதிக சத்து நிறைந்ததும், சுவையானதுமான பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக்கூடியது . இது தோற்றத்தில் வெளிர் பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது சுவையானது. சில சமயம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பேரிக்காயை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும்.

செயல்திறன் மிக்க சத்துக்கள்:

பேரிக்காயில் உயர்தர நார்ச்சத்து. ஆன்டிஆக்ஸிடென்ட், உயர்தர ப்ளேவனாய்டுகள், பீட்டா கரோட்டீன் ஆகியவை உள்ளன. மேலும் பேரிக்காயில் தாமிரம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மேங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பி காம்பளக்ஸ் வைட்டமின், போலேட், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி 6 பேன்றவை ஆகியவை அடங்கியுள்ளன.

நன்மை தரும் நார்ச்சத்து:

பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு நன்மை தருகிறது. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. குறைந்த கலோரி கொண்ட பேரிக்காய் உடல் பருமனை குறைக்கிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை அகற்றுகிறது. இதில் வைட்டமின் சி செரிந்துள்ளது.

எலும்பு வளர்ச்சிக்கு:


இதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் பேரிக்காய் சாப்பிட்டால் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு நன்மை ஏற்படும். கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து.தாய்ப்பால் சுரக்கும்

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலே சிறந்த ஊட்டச் சத்து மிகுந்த உணவாகும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை. இவர்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

குழந்தைகள் வளர்ச்சிக்கு:

வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. பேரிக்காய் ஒரு சில மாதங்களில் மட்டுமே கிடைக்கும். கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் சாப்பிடக் கொடுத்தால் v வளர்ச்சி பெறுவார்கள்.

மறந்து போன பொக்கிஷங்கள்

பாட்டி வைத்தியம்:-


மேகரோகம் குணமாக

ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.

நீரழிவு நோய் குணமாக

மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்து கொள்ளவும். 1 ஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.

இரத்த பேதியை குணப்படுத்த

அத்திபட்டை, நாவல் பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை சமஅளவு பொடி செய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீதபேதி பெரும்பாடு குணமாகும்.

மூட்டுவலி குணமாக

அத்திபாலை பற்று போட்டு வர மூட்டுவலி குணமாகும்.

நரம்பு தளர்ச்சி நீங்க

தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

பற்கள் உறுதியாக இருக்க

மாவிலையை பொடி செய்து பல் துலக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.

சேற்றுபுண் குணமாக

காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுபுண் குணமாகும்.

ஆண்மை குறைவு நீங்க

அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட ஆண்மை பெருகும்.

மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த

வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400, பசுநெய், அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி 6 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

வயிற்றுவலி குணமாக

குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.

பச்சரிசினா பச்ச கலர் அரிசி இல்ல :)

பச்சரிசி:

உணவு வகைகளிலேயே சைவம், அசைவம் என்று உள்ளது போல் காய்கறிகளில் கூட அசைவம், சைவம் என்று முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர்.
அந்த வகையில் தேன், ரத்தத்திற்கு இணையானது என அதர்வண வேதத்தில் கூறப்பட்டு உள்ளது. ரத்தத்தை வழங்க முடியாதவர்கள் தேனை வழங்கி அதற்குண்டான பலனைப் பெற முடியும். ஹோம குண்டங்களில் தேன் வார்ப்பது தற்போதும் நடைமுறையில் உள்ளது. அதேபோல் பேரிச்சம்பழம், மாமிசத்திற்கு சமம் என்றும் பழங்கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.

பச்சரிசி மிகவும் சக்தி வாய்ந்தது. திருமணத்தின் போது முனை முறையாத பச்சரிசியைத்தான் அட்சதைக்காக பயன்படுத்த வேண்டும். இதனைக் கைக்குத்தல் அரிசி என்றும் கூறுவர். எனவே கடைகளில் பச்சரிசி வாங்கி வந்து அட்சதை தயார் செய்வது கூடாது. மாறாக விவசாயிகளிடம் சென்று அறுவடையின் போது சேகரித்து வைத்த முனை முறியாத பச்சரிசியை வாங்கி வந்து அட்சதை தயாரிப்பதுதான் சரியான முறையாகும்.

கைக்குத்தல் அரிசியைத்தான் தானமாக வழங்கவும் பயன்படுத்த வேண்டும். ஞானத்தில், ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களுக்கு பச்சரிசியை தானமாக வழங்கினால் சிறந்த பலன் கிடைக்கும். இதற்கு காரணம் பச்சரிசிக்கு என்று தனி மகத்துவம் உள்ளது. புழுங்கல் அரிசி போல் அதை அவிப்பதில்லை.

எனவே, முனை முறியாத பச்சரிசியை உயர்ந்தவர்களுக்கு தானமாக வழங்கினால் அதைக் கொடுப்பவருடைய தோஷங்கள் அனைத்தும் கழிந்துவிடும் என்று பழங்கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் பூஜைகளுக்கு வாழைப்பழம் (கதளி) பயன்படுத்த வேண்டும். கேரளாவில் பகவதி அம்மன் கோயில்களில் கதளி இல்லாமல் பூஜைகள் நடத்தப்படாது. பச்சை வாழை, கற்பூர வாழை என பல்வேறு வகையான வாழைகளை பூஜைகளுக்கு பயன்படுத்துகின்றனர். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குணங்களும், பலன்களும் உள்ளது.

குறிப்பாக பச்சை வாழையை வன/காவல் தெய்வங்களுக்கும், பூவன் வாழையை வீட்டு தெய்வங்களுக்கும் பூஜை செய்ய பயன்படுத்தலாம்.வாழைக்காய்/பழங்களை கைகளால் தொட்டு அந்தணர்களுக்கு வழங்கும் போது கொடுப்பவருக்கு உள்ள கர்ம வினைகள் பாதி தீர்ந்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னோர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் போது கூட வேதம் ஓதும் அந்தணர்களுக்கு வாழைக்காய்/பழம் மற்றும் பச்சரிசி வைத்து வழங்குவர்.

இது சம்பந்தப்பட்ட வீடு (உயிரிழந்தவர்) மற்றும் அதில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் தோஷத்தைப் போக்கவே. அந்தணர்களும் அவற்றை பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்களுடைய தோஷத்தை ஏற்றுக் கொண்டு அதை கழிப்பதாகவே பழங்காலத்தில் கருதினர்.

பழங்காலத்தில் ஒரு ஊரில் வசிக்கும் மற்ற குடும்பங்களுக்கு ஏற்படும் தோஷத்தை கழிக்கவே அந்தணர்கள் வாழ்ந்து வந்தனர். அதற்காக மக்களிடம் இருந்து எதையும் அவர்கள் எதிர்பார்த்ததில்லை. மாறாக அந்நாட்டின் அரசன் அந்தணர்களுக்கு தேவையான அனைத்து வசதிகள், செல்வங்களையும் அளித்ததாக வரலாறுகள் எடுத்துரைக்கின்றன.

எனவே, முனை முறியாத பச்சரிசி, வாழைப்பழம் ஆகியவற்றிற்கு பல பூர்வீக குணங்கள் உண்டு. முக்கியமான சில பூஜைகளின் போது; கலச பூஜை உட்பட முனை முறியாத பச்சரிசியை பயன்படுத்தப்படுவதை தற்போதும் பார்க்கிறோம்.

கோயில்களில் நெய்வேத்தியம் செய்ய முழுக்க முழுக்க பச்சரிசியே பயன்படுத்தப்படுகிறது. வீடுகளில் மாக்கோலம் இடுவதற்கும் பச்சரிசியை பயன்படுத்தினால் தெய்வீகத்தன்மை கிடைக்கும்.

அட்சய திருதியை தினத்தன்று முனை முறியாத பச்சரிசியை வாங்குவதும், தானமாக வழங்குவதன் மூலமும் லட்சுமியின் அருளைப் பெற முடியும்.

உளுந்து - மருத்துவப் பயன்கள்:



நோயின் பாதிப்பு நீங்க:

கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.

இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

உடல் சூடு தணிய:

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக:

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

உளுந்து வடை:

உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.

எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு:

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுப்பெற:

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.
இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு:

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்:

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

பாகற்காயின் நன்மைகள்

பாகற்காய் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் 10 பயன்கள்:-

1. பசுமையான பாகற்காய்கள், ஆஸ்துமா, சளிப் பிடித்தல், இருமல் போன்றவற்றைத் தீர்ப்பதில் மிகச்சிறந்த நிவாரணியாகப் பயன்படுகின்றன.

2. தினந்தோறும் ஒரு டம்ளர் பாகற்காய்ச் சாற்றினை அருந்தினால், ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், இதன் பலனைக் காணலாம்.

3. பாற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோயெதிர்ப்புச் சக்தி கூடும்.

4.பாகற்காயை உண்டு வந்தால், சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும். பாகற்காயை சாறு எடுத்து, அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, தினந்தோறும் வெறும் வயிற்றில் 6 மாதம் அருந்தி வந்தால், கண்கூடாகப் பலனைக் காணலாம்.

5.டைப் 2 நீரிழிவு நோயை (type 2 diabetes) எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

6.பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், அது செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்பட்டு, கழிவுகள் எளிதாக வெளியே தள்ளப்படுகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் நீங்குகிறது. சிரமமின்றி மலம் கழிக்க முடிகிறது.

7.ஆரோக்கியமான சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் பேணுவதற்கு பாகற்காய் மிகவும் உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது.

8.பாகற்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் நீக்கப்பட்டு, இதய நோய் எளிதில் வருவதைத் தடுக்கிறது.

9.புற்றுநோய் செல்கள் பல்கிப் பெருகுவதை பாகற்காய் தடுக்கிறது.

10.உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பாகற்காயில் நிறைந்துள்ளன. உடலின் செரிமான மண்டலத்தை நன்றாகத் தூண்டி, நல்ல செரிமானத்தை உண்டாக்குகிறது. இதனால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, வேகமாக உடல் எடையை குறைக்கிறது.