Monday, December 30, 2013
எலுமிச்சம்பழம்
மனிதன் தனக்கு வேண்டிய தேவையான வைட்டமின் சி யை அவன் உணவின் மூலம்தான் பெறமுடியும். அதற்கு கை கொடுப்பது எலுமிச்சை பழச்சாறாகும். ஆதிகாலந்தோட்டு மனித பரிணாம வளர்ச்சிக்கு அஸ்கார்பிக் அமிலம் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது.
உயிரியல் ரசாயனமாற்றம் நடைபெறுவதில் பங்கு வகிப்பது வைட்டமின் -சி ஆகும். …ஸ்கர்வி எனும் ஒருவகை நோய் உலகின் பலரை துன்புறுத்தியது. இதற்கு காரணம் என்ன? என்று கண்டறிந்த போது வைட்டமின் சி பற்றாக்குறைதான் காரணம் என்று கண்டறிந்தார்கள். வைட்டமின் சி ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது. தக்காளி, மிளகு, முட்டைகோஸ், கொய்யா, காலிஃபிளவர் போன்றவற்றில் இருக்கிறது. இத்தனை கனிகளில் வைட்டமின் சி இருந்தும் நம்மில் பலர் இதனை மாத்திரை வடிவத்தில்தான் சாப்பிட விரும்புகின்றனர். அதுவும் அதிகம் செலவு செய்து. ஆனால் ஒன்று தெரியுமா? இந்தமாத்திரைகளில் காய்கனிகளில் இருப்பதைவிட குறைவாகத்தான் வைட்டமின் சி இருக்கிறது. எனவே காய்கனிகளுக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும்.
குழந்தைகளுக்கு 35 மி.கிராமும், பெரியவர்களுக்கு 50 மி.கிராமும், பாலு}ட்டும் தாய்க்கு 80 மி.கிராம் வைட்டமின் சியும் தினம் தேவையாகும்.
நகர்புற ஏழ்மையானவர்களிடம் வைட்டமின் சி பற்றாக்குறையால் ஸ்கர்வி எனும் நோய் பரவலாக இப்போதும் இருந்து வருகிறது. முடியில் நிறமாற்றம், முடிஉதிர்தல், தோலில் ரத்த கசிவு, கறுப்பு புள்ளிகள் தோன்றும். இதற்கு அதிக அளவில் வைட்டமின் சி யை தர எளிதில் குணமாக்கலாம்.
உருளைக்கிழங்கு
புனைப்பெயர்
ஸ்பட், மர்பி, பூமி ஆப்பிள்
பணி
பல நாடுகளில் நிரந்தர உணவு, மற்ற காய்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு, சூப், சாலட், கூட்டு, குருமா குழம்பாக பரிணமிக்கும். வறுத்து, அவித்து, பொரித்து சமையல் செய்ய ஒத்துழைக்கும்.
உபரி பணி
பசை, ஆல்ஹால், டெக்ட்ஸ்ரோஸ், குளுக் கோஸ் தயாரிக்க பயன்படுதல்.
பிறப்பு
18-ம் நூற்றாண்டில் பிரஞ்சு மனிதர் அன்டயின் அகஷ்ட் இதன் பூவை முதன் முதலில் சட்டை பட்டனில் சொருகி கொண்டார். அதன் பின்னர் பதினாறாம் லூயி காய்கறிபோல சமைக்கலாம் என தனது ராஜசபையில் உத்தரவிட்டான். அதன் பின்னர் உலகம் முழுதும் பரவலானது.
எதிர்ப்பு
ஆரம்பத்தில் ஸ்காட்லாந்து பாதிரியார்கள் உருளைகிழங்கு உண்ணும் பொருளல்ல என்றார்கள். இதற்கு இவர் கள் சொன்ன காரணம்„ பைபிளில் உருளைப்பற்றிய செய்தி வரவில்லை என்பதுதான்.
பயன்
உருளை சத்து மிகுந்தது. இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது. மற்ற காய்கறியுடன் ஒப்பிடும் போதுகுறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது. இதனை வறுத்து உண்பதைவிட வேக வைத்து உண்பதே நல்லது.
ஆலோசனை
உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
நீர் வகைகள்!!!!
மூலிகை நீர்
சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள்
நோய் தடுப்பில் சிறப்பிடம் பெறுகின்றன. உணவுக்கு உணவாகவும், மருந்துக்கு
மருந்தாகவும் பயன்படுகின்றன. இச்சுவை நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில்
உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை
சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது.
ஆவாரம்பூ நீர்
“ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ” என்ற பழமொழிக்கு ஏற்ப
நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ
தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு,
பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல்
தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி,
வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள்
அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில்
குடிக்கவும்.
கரிசாலை நீர்
சிறுநீரக செயலிழப்பு, அதிக
இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம்
ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர்
தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம்
போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி
வரவும்.
செம்பருத்தி நீர்
செம்பருத்தி பூ நீர் இதய சுவர்
ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல்
தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம்,
கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது. காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து
இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப்
பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி
இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும்.
சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு
இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
நன்னாரி நீர்
“தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்”
என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து
கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய
கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து
உபயோகிக்கவும்.
துளசி நீர்
குடல் காய்ச்சல், மஞ்சள்
காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும்
குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு
கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று
இனிப்பு சேர்த்து, தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி
தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர்
குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை
பயன்படுத்தி பலன் பெறலாம்.
வல்லாரை நீர்
யானைக்கால்,
வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற
நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். “காய சித்திக்கு புளியாரை„
கபால கோளாறுக்கு வல்லாரை” என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம்
எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர்
தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும்
என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள
நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும்,
பயன்படுத்தி பயன் பெறலாம்.
சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள் நோய் தடுப்பில் சிறப்பிடம் பெறுகின்றன. உணவுக்கு உணவாகவும், மருந்துக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இச்சுவை நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது.
ஆவாரம்பூ நீர்
“ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ” என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.
கரிசாலை நீர்
சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.
செம்பருத்தி நீர்
செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது. காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
நன்னாரி நீர்
“தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.
துளசி நீர்
குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து, தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.
வல்லாரை நீர்
யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். “காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை” என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்.
ஆண்கள் புற்றுநோயைத் தடுக்கும் தக்காளி
ஆண்கள் புற்றுநோயைத் தடுக்கும் தக்காளி
புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆண்களை அதிக அளவில் தாக்கும் புற்றுநோய். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இவ்வகை புற்றுநோய் வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
புரோஸ்டேட் புற்றுநோய் ஆண் உறுப்புக்கு இணையான சுரப்பி திரள்களால் ஆன பெருஞ்சுரப்பியை தாக்குகிறது. இதனால் சிறுநீரக மண்டலம் பாதிக்கப்படுகிறது. விளைவு.. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போல தோன்றுவது, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருப்பது, சிறுநீருடன் ரத்தம் கலந்து போவது போன்ற அறிகுறிகள் தென்படலாம்.
இந்நிலையில் புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் தக்காளிக்கு இருப்பதாக டாக்டர் மைக்லே; டபிள்யு. ஸ்மித் தெரிவித்துள்ளார். தக்காளியில் அதுவும் சமைத்த தக்காளிக்கு புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தக்காளியில் காணப்படும் லைக்கோபீன் என்றொரு பொருள்தான் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. மேலும் தர்ப்பூசணி பழம், ரோஸ் நிற திராட்சை பழங்கள் ஆகியவற்றிலும் லைக்கோ பீன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆண்களை அதிக அளவில் தாக்கும் புற்றுநோய். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இவ்வகை புற்றுநோய் வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
புரோஸ்டேட் புற்றுநோய் ஆண் உறுப்புக்கு இணையான சுரப்பி திரள்களால் ஆன பெருஞ்சுரப்பியை தாக்குகிறது. இதனால் சிறுநீரக மண்டலம் பாதிக்கப்படுகிறது. விளைவு.. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போல தோன்றுவது, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருப்பது, சிறுநீருடன் ரத்தம் கலந்து போவது போன்ற அறிகுறிகள் தென்படலாம்.
இந்நிலையில் புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் தக்காளிக்கு இருப்பதாக டாக்டர் மைக்லே; டபிள்யு. ஸ்மித் தெரிவித்துள்ளார். தக்காளியில் அதுவும் சமைத்த தக்காளிக்கு புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தக்காளியில் காணப்படும் லைக்கோபீன் என்றொரு பொருள்தான் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. மேலும் தர்ப்பூசணி பழம், ரோஸ் நிற திராட்சை பழங்கள் ஆகியவற்றிலும் லைக்கோ பீன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பீட்ரூட்
தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.
பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும்.
பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.
பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.
பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும்.
பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும்.
பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும்.
பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
அத்திப்பழம்
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது
1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,
2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,
3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.
விஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவி லும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள
சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.
Subscribe to:
Posts (Atom)

