Sunday, January 12, 2014

இஞ்சிப்பால்

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?

நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்

நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்

இன்றைய இளைய தலைமுறையினரை அதிகமாக பாதித்திருக்கும் பிணி இது. எழுதினால் கை நடுங்கும். எதை எடுத்தாலும் ஒரு தடுமாற்றம், அடிக்கடி களைப்பு, சோர்வு, தூக்கமின்மை இவைகள் முக்கிய அறிகுறிகளாகும். நரம்புத் தளர்ச்சி ஏற்பட்ட பெண்கள் மிகவும் பாதிக்கப் படுகின்றார்கள். அடிக்கடி அழுவதும், சிரிப்பதும், பயித்தியம் போல் நடப்பதும் உண்டு.

எளிதில் சீரணமாகக் கூடிய உணவு வகைகள் காலை மாலை உணவுடன் இனிப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளுதல் நல்ல உடைகள், வாசனைப் பொருட்கள் கொள்ளுதல் பூந்தோட்டங்களில் கடற்கரையில் உலாவுவது என அவர்கள் மனோ நிலை எப்போதும் சந்தோஷ சூழலில் வைத்திருப்பது அவசியம்.
அன்பும், அரவணைப்பும் அவர்களுக்கு ஆறுதல் தரும்.

சித்த மருந்து..

அமுக்கிராக் கிழங்கு - ஐந்நூறு கிராம்.
மிளகு - இருபத்தி ஐந்து கிராம்.
சுக்கு - இருபத்தி ஐந்து கிராம்.
அதிமதுரம் - இருபத்தி ஐந்து கிராம்.
ஏல அரிசி - இருபத்தி ஐந்து கிராம்.
சாதிக்காய் - இருபத்தி ஐந்து கிராம்.
தேன் - ஒரு கிலோ.
பால் - அரை லிட்டர்.

அமுக்கிராக் கிழங்கை நன்றாக இடித்துக் கொள்ளவும்.ஒரு மண் சட்டியில் பாலை ஊற்றவும்.நல்ல ஒரு வெள்ளைத் துணியால் பானையின் வாயை கட்டி இடித்து வைத்துள்ள அமுக்கிராக் கிழங்குப் பொடியை துணியின் மேல் பரப்பி பானையின் மூடியால் பொடியை மூடி சுமார் முப்பது நிமிடங்கள்
சிறு நெருப்பில் அவித்து எடுத்துக் கொள்ளவும்.

இரண்டு மணி நேரம் நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்துக் கொள்ளவும்.

மற்ற மருந்துகளை தனித்தனியாக் இடித்து சலித்து மேற்கண்ட அளவில் எடுக்கவும்.

எல்லா பொடிகளையும் நன்கு கலக்கிக் கொள்ளவும்.

ஒரு கிலோ தேனை ஒரு சட்டியில் ஊற்றி [ சிறிய தணலில் ] மேற்கண்ட எல்லாப் பொடிகளையும் சிறிதுசிறிதாகக் கொட்டி நன்கு கிளறி கிண்டி வைக்கவும்

உண்ணும் முறை ; -

காலை உணவு உண்டு ஒரு தேக்கரண்டி அளவும் இரவு உணவிற்குப் பின்னர் ஒரு தேக்கரண்டி அளவும் உட்கொண்டு பால் அருந்தவும்.

நாற்பத்தெட்டு நாட்கள் உண்ண வேண்டும்.

பத்தியம் ; -

குளிர்ந்த பானங்கள், மீன், கருவாடு போன்ற அசைவ உணவுகளை அறவேத் தவிர்க்கவும்.

Sunday, January 5, 2014

கீரைகள்

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கீரைகள் :
************************************

உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் அள் ளித்தரும் முருங்கைக் கீரை, அரைக் கீரை, சிறு கீரை, முளைக் கீரை, பொன்னாங் கண் ணிக் கீரை, மணத்தக்காளிக் கீரை ஆகிய ஆறு வகையான கீரைகளைப் பற்றி இங்கு சுருக்க‍மாக பார்ப்போம்.

முருங்கைக் கீரை:

இதை நெய்யில் பொரியல் செய்து உணவி ல் சேர்த்து வந் தால் நாளடைவில் ஆண்களுக்கு வாலிபமும், வீரியமும்,

தாது விருத்தியும் உண்டாகு ம் இதை உணவில் 40 நாட்கள் சாப்பி ட்டால் இல்லற வாழ்க் கையில் இன்பம் உண்டாகு ம். மேலும் இரத்தசோகை யை தடுக்கும், இரத்த விருத் தியை உண் டாக்கும்.

அரைக்கீரை:

இதை சாப்பிட்டுவர பித்தம் தொட ர்புடைய அனைத்து வியா திகளும் குணமடையும். அதிகளவில் சிறு நீர் இறங்குவதை, கட்டுப்படுத்தி இரத்த பிரமேகம் என்னும் வியாதி யைக் குணப்படுத்த வல்லது.

சிறு கீரை:

சிறுகீரையைப் பற்றி தெரியாதவர் யாருமில்லை. சிறுகீரை செம்புச்சத் தும், உஷ்ணவீர்யமும் உடையது. கு டல், இருதயம், மூளை, ரத்தம் இவை களுக்கு நல்ல வலிமையை தரும். சிறுகீரையை அன்றாட உணவில் சேர் த்துக்கொண்டு வந் தால் இருதய வியாதிகள் போகும்.

முளைக்கீரை:

முளைக்கீரையை உண்ணுவ தால் சொறி, சிரங்கு, நரம்பு தள ர்ச்சி குணமடையும். எலும்பு வளர்ச்சியடையும், மாலைக் கண் பார்வை குறைவு நீங்கும். அஜீரணக்கோளாறு, வயிற்றுப் புண் சரியாகும்.

பொன்னாங்கண்ணிக் கீரை:

பொன்னைக் காடுத்து, பொன்னாங்கண்ணி வாங்குஎன்று பழமொழி உண்டு. இக்கீரை கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்க ளையும் குணமாக்க வல்லது. இக்கீ ரையை வெண்ணெய் சர்த்து உண் ண கண் சம்பந்தப்பட்ட 96 வியாதி கள் நீங்கும் இக்கீரையை உண்பதா ல் வாய்ப்புண், வாய் நாற்ற ம், ஈரல் நோய், மூலச்சூடு, கைகால் எரிவு, உலர்த்து மேகம்,வள்ளை வயிற்றெரிச்சல், வாத தோடம், தேகச்சூடு முதலிய வியாதி கள் நீங்கும்.

Saturday, January 4, 2014

மஞ்சள் பால்...



இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ -இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள்.

*விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

*இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.

*பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது

.*மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்

பற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக!



அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இருப்பினும் ஏதாவது உணவுகளை சாப்பிட்டு விட்டால், பற்களில் உணவுக்கறைகள் படிந்து மற்றும் ஆங்காங்கு சிக்கிக் கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன.

பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால், பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் ஒரு சில வீட்டுப்பொருட்களைப் பயன்படுத்தி, பற்களை துலக்கினாலும், பற்களை நன்கு ஆரோக்கியமாகவும், பளிச் சென்று வெண்மையுடனும் இருக்கும். சரி, இப்போது அத்தகைய பொருட்கள் என்ன வென்று பார்க்காம்.

• எலுமிச்சை எலுமிச்சை துண்டை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.

• பற்களை வெள்ளையாக்கும் பராம்பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள்தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க வேண்டும்.

• பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.

• அக்காலத்தில் பேஸ்ட் கிடைக்காத நேரத்தில் வாழ்ந்த மக்கள், வீட்டில் விறகு அடுப்பில் சமைக்கும் போது கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்தி பற்களை துலக்கினார்கள். இதனால் பற்கள் வலுவோடு இருப்பதோடு, வெள்ளையாகவும் இருக்கும்.

• அனைவருக்குமே உப்பு பற்களை வெள்ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது என்று. இவற்றை வைத்து பற்களை துலக்கினால் பற்களை வெள்ளையாக மட்டும் மாறாமல், பளிச்சென்றும் மின்னும்.

• ஆரஞ்சு தோல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.

• ஈறுகளில் வலி அல்லது சொத்தை பற்கள் இருப்பவர்களுக்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதிலும் தினமும் பற்களை துலக்கும் போது, பிரஷ்ஷில் சிறிது கிராம்பு எண்ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்க, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

• பற்களை வெண்மையாக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று. இதனை வைத்து தினமும் பற்களை தேய்த்து வந்தால், பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, பளிச்சென்றும் மின்னும்.

• பிரியாணி இலையை பொடி செய்து, அதனை எலுமிச்சை சாற்றில் கலந்து, பற்களை துலக்க, பற்கள் வெள்ளையாகும்.

சூரிய மருத்துவம்..!



சூரிய மருத்துவம் சூரியக் குளியலால் நிகழ்த்தப்பட வேண்டும். விடியற்காலை செவ்விள ஞாயிறே இதற்கு ஏற்றது. காலை 9 மணிக்குமேல் இது ஏற்றத்தக்கதல்ல. உள்ளுடைகளுடன் மட்டும் உடலின் முன் பகுதியிலும், பின் பகுதியிலும் வெய்யில் படும்படு 5 நிமிடத்திலிருந்து 1 மணி நேரம் வரை இருக்கவும். விடியற்காலை சூரியனின் சாய்ந்த ஒளிக்கதிரில் புறஊதா கதிர்கள் உண்டு, இவை உடலுக்கு சக்தி தருபவை. விட்டமின் டி இதில் நிறைய உண்டு. இந்த விட்டமின் பற்றாக்குறையால் குழந்தைகளுக்கு வரும் ரிக்கெட்ஸ், எலும்பு சம்பந்தமான நோய்கள் சூரியக் குளியலால் குணமாகும்.

சூரிய ஒளியின் இரசாயனக் கதிர்கள் இரத்தச் சிவப்பு அணுக்களின் உற்பத்தியைப் பெருக்குகின்றன. சோகை நோய்க்கு சூரியக் குளியல் மாமருந்து. முடி கொட்டுபவர்கள் அதனை நிறுத்த சூரியக் குளியல் செய்யுங்கள். முடி செழித்து வளர கதிரொளி உதவும். கதிரொளி தோலின் வேலையைச் செம்மையாக்குகிறது. தோல் நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய்கிருமிகளை அழிக்கிறது. தோல் நோய்த் தொல்லைகள் மறைய சூரிய குளியல் மிகவும் உதவும்.

எல்லாவிதமான கண் நோய் கோளாறுகளுக்கும் கண்ணை மூடிக்கொண்டு சூரியனைப் பார்க்க வேண்டும். விழியை பக்க வாட்டிலும், மேலும், கீழும் நகர்த்த வேண்டும். சூரியக்குளியலின்போது மயக்கம் வருவோர் நரம்பு வியாதி உள்ளோர், இரத்தச் சிதைவுள்ளவர்கள் இம்மருத்துவம் செய்யக்கூடாது.

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்:



* மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.

* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

* சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

* சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.

* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.

* சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

* பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.