Monday, December 30, 2013

ஆயுர் வேதத்தில் வயாக்ரா

ஆயுர் வேதத்தில் வயாக்ரா

இன்று உலகெங்கும் வயாக்ராமயம். சர்வம்சக்திமயம் என்பது பொய். சர்வம் வயாக்ராமயம் என்பது மெய் என்றாகி விட்டது. இன்று வயோதிகர்கள் வயாகரா சாப்பிட்டு வாலிபனாகி வருகிறார்கள். இந்தியாவில் வயாகரா கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. அதையும் வாங்கி பயன் படுத்துகிறார்கள். அறிவாளிகள். வயாகராவை விடபல மடங்கு அதிக பலனளிக்கும் அற்புத மருந்துகள் நம் இந்திய மருத்துவத்தில் உண்டு. அதே நேரத்தில் வயாக்ரா உடலை மோசமாக்கி உயிரையும் போக்கிவிடுகிறது. ஆனால் இந்திய மருந்துகளோ எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது. ஆண்களுக்கு தாம்பத்திய சுகத்தையும் நீடித்து வைக்கிறது. இதுவே இந்திய மருத்துவ முறையின் அற்புதம். இந்தியாவில் விளைந்த பாசுமதி, மஞ்சள் இன்னும் பல மூலிகைகளுக்கு அமெரிக்கா சொந்தம் கொண்டாடிவருவதுபோல் நமது ஆயுர்வேத மருந்தான அமுக்கரா கிழங்கையும் அமெரிக்கா திருடி விட்டது. அமுக்கிராவும் வயாகரா போன்றதுதான் என்பது ஆயுர்வேத வைத்தியர்கள் அனைவருக்கும் தெரியும். அமுக்கிராகிழங்கை பாலில் வேகவைத்து எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து இடித்து சூரனமாக்கி சிறிது தேன் கலந்து அருந்திவர ஆண்களுக்கு இல்லற வாழ்க்கையில் இணையிலா இன்பத்தை நல்கும்.

அமுக்ரா சூரணம், மாத்திரை மற்றும் அமுக்ராவை முதன்மையாக வைத்து மற்ற கடைசரக்குகளுடன் சேர்த்து லேகியமாக செய்த அசுவகந்தா லேகியம் ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும். அதனை பயன்படுத்தி எப்பேர் பட்ட ஆண்மைக் கோளாறுகளையும் சரி செய்து இல்லற வாழ்வில் வெற்றியடைய வைக்கும். செலவும் மிகவும் குறைந்தது.

மனிதன் நீடித்த ஆயுளையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் வைத்திருக்க காரணமான மருந்துகள் உண்டு. இந்திய மருத்துவத்தில் நம் முன்னோர்களால் கையாளப்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

அமுக்ரா மட்டுமல்ல காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காயை ஒரு மண்டலம் உண்டு வந்தாலே எவ்வித வயாக்ராவும் தேவையில்லை என்பது தேரையர் வாக்கு.

காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டுவர கோலையூன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே என்கிறார் தேரையர்.

அதுமட்டுமல்ல திரிபலாசூரணம் என்று ஓர் அற்புத சூரணம் உண்டு. அதனை இரவில் மட்டும் பனங்கற் கண்டு சேர்த்து சாப்பிட்டு பின் பசும்பால் உண்டு வர 21 நாட்களில் அபாரமான சக்தி பெற லாம்.

கருவேலம்பிசினை சுத்தமாக்கி பொடித்து நெய்யில் பொரித்து எடுத்து சாப்பிட்டுவர விந்து இறுகும். அதைப் போலவே ஆலம்பிசின், முள்இலவம் பிசின், முருங்கை பிசின் போன்றவை களும் அற்புத சுகத்தை அளிக்கும். ஆனால் இம்மூன்றையும் குறிப்பிட்ட அளவு தண்ணீரில் 12 மணிநேரம் ஊற வைத்து பின் வடித்து அந்நீரை அருந்தி வர வேண்டும்.

நமது இந்திய மருத்துவத்தில் அமுக்ராவுடன் உடலுக்கு வலிமையூட்டும் மற்ற கடைச்சரக்குகள் சேர்க்கப் படுவதால் நம் ஆயுளை வளர்க்கிறது. ஆனால் அமெரிக்க வயாக்ராவில் எதை எதையோ எப்படியோச் சேர்த்து நம் உயிரை எடுத்துவிடுகிறது.

முடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான்

Cardiospermum halicacabum
முடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான்

முடக்கறுத்தான்/ முடக்கற்றான்/ முடர்குற்றான்/ மொடக்கொத்தான்

"சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி"
- சித்தர் பாடல்-

கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.

முடக்கற்றான் கொடிவகையைச் சேர்ந்தது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் முடக்கற்றான் பயிராகும்.தோட்டங்கள், வீட்டு வேலி இவைகளிலுள்ள பெரிய செடிகளின்மேல் படர்ந்து வளரும். உஷ்ண பிரதேசங்களில் முடக்கற்றான் கொடியைப் பார்க்கமுடியாது. வளமான இடங்களில் இந்தக் கொடிசற்று பெரிய இலைகளுடன் செழிப்பாகப் படரும். இந்தக் கொடியின்தண்டும் இலைக் காம்பும் மெல்லியதாகவே இருக்கும். இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு படரும்.

இதன் தண்டு, இலை, காம்பு எல்லாம் நல்ல பச்சை நிறமாகவே இருக்கும். இதன் பூ வெண்நிறமாக இருக்கும். இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். காயைப் பறித்துத் தோலை உறித்தால் உள்ளே மிளகளவு, பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப்பிறைபோல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும்.

இதன் காய் முற்றிய பின் பழுப்பு நிரமாக மாறிக் காய்து விடும். இதை மற்ற கீரைகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.இதை தனியாக மருந்தாகவும் பயன் படுத்தலாம்.

இதன் இலையில் அடங்கியுள்ள சத்துக்கள்:

ஈரப்பதம்-83.3, புரதச்சத்து-4.7, கொழுப்புச் சத்து 0.6, மாவு சத்து 9.1, தாது சத்து 2.3, சக்தி-6 கலோரி முதலியவை உள்ளது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப் படுகிறது.

முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் / முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப்பெயர் பெற்றது.

குழந்தை பிரசவிக்கும் நேரத்தில் ஒரு சில பெண்கள் ரொம்ப கஷ்டப் படுவார்கள் இவர்கள் வேதனையைக் குறைத்து, சுகமாகசுலபமாக பிரசவிக்கச் செய்ய இந்த முடக்கற்றான் நன்கு பயன்படுகிறது.

சுகப்பிரசவம் ஆக:

முடக்கற்றான் இலையைத் தேவையான அளவுகொண்டு வந்து அதைக் காரமில்லாத அம்மியில் வைத்து மை போல்அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டி மார்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். இது கை கண்ட முறையாகும்.

மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக:

மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

முடக்கற்றான் இரசம் தயாரிக்கும் முறை:

ஒரு கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம் தயாரிக்க வேண்டும்.

பாரிச வாய்வு குணமாக -: கைப்பிடியளவு முடக்கற்றான் இலையைக்கொண்டு வந்து நைத்து ஒரு சட்டியில் போட்டு இதே அளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும் இத்துடன் சேர்த்துஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால்பாரிச வாய்வு குணமாகும். தேவையானால் மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடி 3 நாளாக மூன்று முறை கொடுத்து வந்தால், பாரிசவாய்வு பூரணமாகக் குணமாகும்.

சுக பேதிக்கு :

ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒருசட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்துஇதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம்மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம்.

முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்துஎடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி,காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.

முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்டஇருமல் குணமாகும்.

சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாது. இவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் இலையை உலர்த்தி எடுத்த பொடியுடன், சித்திரமூல வேர் பட்டை, கரிய போளம் இவைகளையும் பொடி செய்துகுறிப் பிட்ட அளவு மூன்று நாள் அருந்தி வர மாதவிலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியைமுறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துஅருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.

முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப் படி குடி நீர் அருந்திவர நாள் பட்ட மூல நோய் குணமாகும்.

"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”..!



மிளகு (Black pepper, பைப்பர் நிக்ரம், Piper nigrum):-

"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.

உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.

பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.

Tuesday, December 24, 2013

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு தகவல்!



வரலாற்றுபடி ஸ்ரீராமன் இராவணனை அழித்தார். ஆனால், அன்னை சீத்தா உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ இரவாணனை விட பெரிய அரக்கனான சர்க்கரை நோயை சாகடித்து இந்த பூமியில் வாழ்பவர்களை இன்பத்தில் திளைக்க வைத்துள்ளார் என்பதே நிஜம்.
நீரிழிவு நோயாளிகள் சீத்தா இலையை(துளிர் மற்றும் பழுத்த இலைகளை எடுக்கக்-கூடாது) மிதமான பச்சை இலைகளை 8க்கு மிகாமல் பறித்து நன்றாக கழுவி 300மில்லி தண்ணீருடன் சேர்ந்து இரவில் கொதிக்கவிட்டு முடி வைத்துவிட வேண்டும். தொடர்ந்து மறுநாள் காலையில் கொதிக்க வைக்க வேண்டும். 200 மில்லி குறையாமல்காலையில் வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கும் அளவு மிதமான சூட்டில் சாப்பிட்டு வர படிப்படியாக உடம்பில் சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். இதன் சுவை உவர்ப்பு, கசப்பு எதுவும் இருக்காது. அருந்துவதற்கு சுவையாக தேநீர் போன்று இருக்கும். மருத்துவரின் ஆலோசனை பெற்று மாத்திரை சாப்பிடுபவர்களும் இந்த சீத்தா இலை மருந்தை சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு மண்டலம் (அதாவது 48 நாட்கள்) சாப்பிட்டு வர, மாத்திரை தேவைப்படாது. சர்க்கரை நோயாளிக் அனைத்து பலகார வகைகளை சாப்பிடலாம். இந்த இலைசாறின் மகிமை உடலில் மாற்றம் ஏற்படுத்துவதுடன், சுறுசுறுப்பை உண்டாக்குகிறது. பார்வை கோளாறுகளை சரி செய்யும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்கும். கால் வலியும் -குணமாகும் என்கிறார் சந்திரசேகரன். மேலும் விபரங்களுக்கு சந்திரசேகரன் அவர்களை 9962636061 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவர் சென்னை அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடதக்கது. காவல் ரோந்து பணியுடன் மக்கள நல பணிகளையும் சேர்ந்து செய்கிறார்.
திருவொற்றியயூரை சேர்ந்த மருத்துவர் வரதராஜனிடம் பேசிய போது,
என்னுடைய அம்மா ரூக்மணி சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்தார். நான் பொது மருத்துவர் என்ற முறையில் பல மருந்துகளை கொடுத்தும் சர்க்கரையின் அளவு குறையவில்லை. என்னுடைய பணி நிமிந்தம் காரணமாக சந்திரசேகரன் சந்தித்தேன். அப்போது அவர் இந்த மருந்தை சொன்னார். ஆனால் எனக்கு துளியும் நம்பிக்கையில்லை. ஆனால் முயற்சி செய்து பார்க்கலாம் என்று அம்மாவுக்கு கொடுத்தேன். 15 தினங்கள் சாப்பிடவருக்கு சர்க்கரையின் அளவு 360லிருந்து 160 ஆகிவிட்டது. இதனால் இன்சுலின் மருந்தின் அளவையும் குறைத்துவிட்டேன். இப்போது உடலில் சேர்வு நீங்கி நலமாக இருக்கிறார் என்றார் மருத்துவர் வரதராஜன்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு தகவல்!




நீரிழிவு நோயாளிகள் சீத்தா இலையை(துளிர் மற்றும் பழுத்த இலைகளை எடுக்கக்-கூடாது) மிதமான பச்சை இலைகளை 8க்கு மிகாமல் பறித்து நன்றாக கழுவி 300மில்லி தண்ணீருடன் சேர்ந்து இரவில் கொதிக்கவிட்டு முடி வைத்துவிட வேண்டும். தொடர்ந்து மறுநாள் காலையில் கொதிக்க வைக்க வேண்டும். 200 மில்லி குறையாமல்காலையில் வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கும் அளவு மிதமான சூட்டில் சாப்பிட்டு வர படிப்படியாக உடம்பில் சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். இதன் சுவை உவர்ப்பு, கசப்பு எதுவும் இருக்காது. அருந்துவதற்கு சுவையாக தேநீர் போன்று இருக்கும். மருத்துவரின் ஆலோசனை பெற்று மாத்திரை சாப்பிடுபவர்களும் இந்த சீத்தா இலை மருந்தை சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு மண்டலம் (அதாவது 48 நாட்கள்) சாப்பிட்டு வர, மாத்திரை தேவைப்படாது. சர்க்கரை நோயாளிக் அனைத்து பலகார வகைகளை சாப்பிடலாம். இந்த இலைசாறின் மகிமை உடலில் மாற்றம் ஏற்படுத்துவதுடன், சுறுசுறுப்பை உண்டாக்குகிறது. பார்வை கோளாறுகளை சரி செய்யும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்கும். கால் வலியும் -குணமாகும் என்கிறார் சந்திரசேகரன். மேலும் விபரங்களுக்கு சந்திரசேகரன் அவர்களை 9962636061 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவர் சென்னை அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடதக்கது. காவல் ரோந்து பணியுடன் மக்கள நல பணிகளையும் சேர்ந்து செய்கிறார்.

திருவொற்றியயூரை சேர்ந்த மருத்துவர் வரதராஜனிடம் பேசிய போது,

என்னுடைய அம்மா ரூக்மணி சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்தார். நான் பொது மருத்துவர் என்ற முறையில் பல மருந்துகளை கொடுத்தும் சர்க்கரையின் அளவு குறையவில்லை. என்னுடைய பணி நிமிந்தம் காரணமாக சந்திரசேகரன் சந்தித்தேன். அப்போது அவர் இந்த மருந்தை சொன்னார். ஆனால் எனக்கு துளியும் நம்பிக்கையில்லை. ஆனால் முயற்சி செய்து பார்க்கலாம் என்று அம்மாவுக்கு கொடுத்தேன். 15 தினங்கள் சாப்பிடவருக்கு சர்க்கரையின் அளவு 360லிருந்து 160 ஆகிவிட்டது. இதனால் இன்சுலின் மருந்தின் அளவையும் குறைத்துவிட்டேன். இப்போது உடலில் சேர்வு நீங்கி நலமாக இருக்கிறார் என்றார் மருத்துவர் வரதராஜன்.

பிறந்த குழந்தையின் வளர்ச்சி நிலைகள்:-



தாயின் கர்ப்பப் பையில் கருவாக உருவாகி, 9 மாதத்தின் நிறைவில் சரியான உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

அந்த வகையில், ஒரு சில குழந்தைகள் விரைவாகவே திரும்புதல், தவழுதல் போன்றவற்றை செய்யலாம். சில குழந்தைகள் மாதங்கள் கடந்தும் செய்யலாம். அது அவற்றின் வளர்ச்சியைப் பொருத்த விஷயமாகும். ஆனால் பொதுவாக குழந்தைகளின் வளர்ச்சியைப் பற்றி இங்கு காணலாம்.

முதல் மாதம்

கை, கால்களில் அசைவு இருக்கும். 24 மணி நேரத்தில் 22 மணி நேரம் உறங்கிக் கொண்டுதான் இருக்கும். பசிக்காகவும், உடல் உபாதைகளுக்காகவும் குழந்தைகள் அழும்.

இரண்டாம் மாதம்
அசைவுகளை உணரும். அழுகையைத் தவிர சில சிறிய சத்தத்துடன் கத்தும். தாயின் அரவணைப்பை நன்கு உணர்ந்திருப்பர்.

மூன்றாம் மாதம்
தாயின் முகம் நன்கு அறிந்திருக்கும். குரல்களைக் கேட்டு அந்தப் பக்கமாகத் திரும்பும். அசைவுகளை உற்று நோக்கும்.

நான்காம் மாதம்
நிறங்களை அறிந்திருக்கும். குழந்தைகளுக்கு கழுத்து நிற்க ஆரம்பிக்கும். கழுத்தை அவர்களாக திருப்பி அசைவுகளை கவனிப்பார்கள். அவர்களது பெயரை கூப்பிட்டால் அந்த திசையை நோக்கி திரும்புவார்கள்.

5ம் மாதம்
ஒரு பக்கமாக ஒருக்களித்து படுப்பார்கள். கவிழ்ந்து கொள்ள முயற்சித்து கை சிக்கிக் கொண்டு அழுவார்கள். இந்த மாதங்களில் குழந்தைகள் கவிழ்ந்து கொள்ள எடுக்கும் முயற்சிகள் தோல்வியாகவே இருக்கும்.

6ம் மாதம்

வாயில் நுரை வரும். பேசுவதற்கு வாயைக் குழப்புவார்கள். கவிழ்ந்து கொள்வார்கள். தலை நன்றாக நிற்கும். பால் பற்கள் முளைக்கத் துவங்கியிருக்கும்.

7ம் மாதம்

ஒரு முறை கவிழ்ந்தும், அதில் இருந்து திரும்ப மல்லாக்காக படுத்தும் உருளுவார்கள். சில குழந்தைகள் பின்னுக்கு செல்ல காலை உதைக்கத் துவங்கும். உட்கார வைத்தால் உட்காருவார்கள்.

8ம் மாதம்

பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுவார்கள். எந்த பொருளையும் வாயில் வைத்துக் கொள்ள முனைவார்கள். தானே உட்காருவார்கள். நிற்க வைத்தால் தள்ளாடிக் கொண்டே நிற்பார்கள்.

9ம் மாதம்

ஒரு அடி எடுத்து வைத்து நடப்பார்கள். அவர்களது பெயரைக் கூப்பிட்டால் திரும்பி பார்ப்பார்கள். ஒவ்வொரு வார்த்தைகளாக பேசுவார்கள். தாய், தந்தையை அடையாளம் காட்டுவார்கள்.

10ம் மாதம்

அத்தை, தாத்தா, மாமா போன்றவற்றை நன்கு உச்சரிப்பார்கள். தாயின் பாடலுக்கு நடனமாடுவார்கள். டாடா சொல்வது, உணவை மறுப்பது, தெரியாதவர்களிடம் செல்ல மறுப்பது போன்றவை உருவாகும்.

12ம் மாதம்

ஒரு வயது நிரம்பும் போது முன்வரிசை பால் பற்கள் அனைத்தும் முளைத்திருக்கும். விழுந்து எழுந்து அவர்களாக நடப்பார்கள். பல வார்த்தைகளை அவர்களாகவே பயன்படுத்துவார்கள். ஒரு சில குழந்தைகள் ஒன்றிரண்டு வார்த்தைகளை இணைத்துப் பேச முயற்சிக்கும். பொருட்களையும், உறவினர்களையும் அடையாளம் காட்டுவார்கள்.

15வது மாதம்
தனியாக நடப்பார்கள். உணவுகளை ருசித்து உண்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப பயம், சந்தோஷம், அழுகை ஆகியவற்றை அவர்களே வெளிப்படுத்துவார்கள். படிகட்டுகளை ஏற முயற்சிப்பார்கள். வார்த்தைகளை தெளிவாக பேசுவார்கள்.

இவ்வாறாக குழந்தை வளர்ந்து சிறுவனாகிறது. இந்த படிநிலைகளில் சில குழந்தைகளின் வளர்ச்சியும், மற்ற சில குழந்தைகளின் வளர்ச்சியும் வேறுபடும்.

சிவந்த கண்ணுக்கு செண்பகம்



கண்களில் உள்ள வெண்விழிக்குச் செல்லும் நுண்ணிய ரத்தக்குழாய்களில் ரத்தம் தேங்கும் போதும், ரத்தக்கசிவு ஏற்படும் போதும், வெண்படலம் சிவப்பு நிறமாகத் தெரியும். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் தாக்குதலாலும், “கஞ்சக்டிவா’ எனும் விழியடுக்கில் ஒவ்வாமை ஏற்பட்டு, உறுத்தலின் காரணமாக சிவப்பு நிறம் ஏற்படும். இதனால் கண்ணில் நீர்வடிதல், கண்வலி, கண் எரிச்சல், இமைகள் ஒட்டிக் கொள்ளுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இது காற்றின் மூலமாகவும், கிருமித்தொற்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் உடமைகளைத் தொடுவதாலும் மற்றவர்களுக்கு பரவுகிறது.

வெயில் காலம் முடிந்து, குளிர் ஆரம்பிக்கும் போதும், கடும் மழை ஓய்ந்த பின்னும் இந்த கண்நோய் வேகமாக பரவுகிறது. சித்த மருத்துவத்தில் அதிமந்த நயனரோகம், அக்கரரோகம் என்றழைக்கப்படுகிறது. அக்கரரோகத்தில், நோய் வந்த சிலநாட்களில் தானாகவே குணமாகிவிடும் என்பதால் கண்களுக்கு ஓய்வும், சுத்தமான நீரில் கழுவுவதே ஆரம்ப சிகிச்சையாகும். நீரில் கிருமிநாசினி, ஆண்டிபயாடிக் மருந்துகளைச் சேர்த்து கண்களைக் கழுவலாம்.
ஒவ்வாமையை நீக்கி, நுண்கிருமிகளை வெளியேற்றும் அற்புத பணியைச் செய்கிறது செண்பக பூக்கள். மைக்கேலியா செம்பகா என்ற தாவரவியல் பெயர்கொண்ட பெரிய செண்பக மரங்களின் பூக்களிலிருந்து, நுண்கிருமிகளை கொல்லும் கண்நோய் மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. இப்பூக்களில் உள்ள பீட்டா சைட்டோஸ்டீரால், லிரியோடினின், மோனோசெஸ்குட்டிர்பின்கள் கிருமிநாசினியாக பயன்படுகின்றன.

செண்பகப்பூ, அதிமதுரம், ஏலக்காய், குங்குமப்பூ ஆகியவற்றை நீர்விட்டு நன்கு அரைத்து, கலவையை கண் இமைகளின் மேலும், கீழும் பற்றுப்போட்டு ஒருமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவவேண்டும். செண்பகப்பூவை ஒரு கைப்பிடியளவு எடுத்து நீரில் ஊறவைத்து, 3 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரில் கண்களைக் கழுவலாம். இதனுடன் திரிபலா சூரணத்தை சேர்த்தும் நீரில் கலக்கி கண்களை கழுவினால் சிவப்பு மாறும்.