Monday, December 30, 2013

இளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்!



கோடை என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது இளநீர் தான். மற்ற பானங்களை விட இளநீருக்கே மவுசு அதிகம். இது இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பானம் என்பதால் இதை அதிகம் விரும்புவர்.

மேலும் இது தாகத்தை தணித்து புத்துணர்ச்சியும் அளிக்கிறது. அடிக்கும் கோடை வெயிலில் பச்சை இளநீரை நேரடியாக அதன் மட்டையிலிருந்து அப்படியே பருகுவது என்பது ஒரு பேரானந்தமாகும். இது புத்துணர்ச்சி தருவது மட்டுமல்லாது பல உடல் நல நன்மைகளையும் அளிக்கிறது.

இந்த நீரில் வைட்டமின்கள், கனிமங்கள், மின்பொருட்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள் மற்றும் சைட்டோகைனின் வளமாக இருக்கின்றன. இளநீர் அதன் ருசிக்கும், நமக்கு அளிக்கும் புத்துணர்ச்சிக்கும், மருத்துவ குணங்களுக்கும் உலகம் முழுவதும் புகழ் பெற்று திகழ்கிறது.

மேலும் இளநீரில் உடலுக்கு தேவையான பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், நியாசின், தையமின், பைரிடாக்சைன் மற்றும் ஃபோலேட் ஆகியவைகள் இயற்கையிலேயே கிடைக்கிறது.

மேலோட்டமாக இது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இதில் உள்ள மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டாமா? சரி கொஞ்சம் விரிவாக பார்க்கலாமா?

வயிற்றுப்போக்கு:

வயிற்றுக் போக்கு அதிக அளவில் இருக்கும் போது நீர்ச்சத்து அதிக அளவில் குறைவதால், இளநீர் அருந்துவது மிகவும் நல்லது.

இளநீரில் அமினோ அமிலங்கள், என்சைம்கள், சாப்பிடக்கூடிய நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மேன்கனீஸ் போன்ற கனிமங்கள் அதிக அளவு உள்ளன.

மேலும் இதில் உள்ள நல்ல அளவிலான எலெக்ட்ரோலைட் பொட்டாசியம், உடம்பில் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் எலெக்ட்ரோலைட் குறைப்பாட்டை நீக்க உதவும்.

எடை குறைவு:

இளநீரில் குறைந்த அளவே கொழுப்பு இருப்பதால் மற்றும் அதனை பருகினால் வயிறு நிறைந்து போவதால், அதிகமாக தேவையில்லாத உணவுகளை சாப்பிட முடியாமல் உடல் எடை குறைய உதவுகிறது.

நீரிழிவு:

இளநீரில் சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதனாலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதாலும், சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகுவது நல்லது.

வைரஸ் நோய்கள் :

சளிக் காய்ச்சல் மற்றும் ஹேர்ப்ஸ், இவை இரண்டுமே சில வைரஸ் கிருமிகள் நம் உடம்பை தாக்குவதால் ஏற்படுகிறது. இளநீரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அஅடங்கியிருப்பதால், மேற்கூறிய வைரஸ் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக இது அமைகிறது.

உடல் வறட்சி:

உடல் வறட்சி பிரச்சனைக்கு இளநீரை நரம்பின் வழியாக உடம்பில் ஏற்றலாம். மிகவும் தொலைவில் எந்த ஒரு மருத்துவ வசதியும் இல்லாத இடத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு, இப்பிரச்சனை ஏற்பட்டால் தற்காலிகமாக இந்த அணுகுமுறையை கையாளலாம்.

இரத்த அழுத்தம்:

இளநீரில் வளமான அளவு பொட்டாசியம் இருப்பதால் அது கூடுதல் இரத்த அழுத்தம் மற்றும் வாதத்திற்கும் நல்ல மருந்தாக அமைகிறது.

சிறுநீரக கற்கள்:

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இளநீரில் அதிகம் இருப்பதால், இது சிறுநீரகத்தில் கற்கள் வருவதை தடுக்கும்.

சரும பிரச்சனைகள் :

பருக்கள், புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை ஏற்பட்ட சருமங்களில் இளநீரை இரவில் படுக்கும் போது தடவி, காலையில் கழுவ வேண்டும். இதை தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால் சரும பிரச்சனைகள் சரியாகும்.

புற்றுநோய் :

சில ஆய்வுகளின் படி, இளநீரில் சைட்டோகைனின்கள் இருப்பதால் முதுமை தோற்றத்தை தடுக்கவும், கார்சினோஜெனிக் மற்றும் த்ரோம்பாட்டிக்களை தடுக்கவும் உதவுகிறது. மேலும் இதிலுள்ள செலினியம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராகவும் விளங்கும்.

கொலஸ்ட்ரால்:

மிருகங்களை வைத்து செய்த ஆராய்ச்சிகளின் படி, இளநீரில் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் என்று கூறினாலும், அது வெறும் தொடக்க நிலையிலே இருக்கிறது. ஆனால் மற்ற பானங்களை விட இளநீர் பருகுவது உடம்புக்கு மிகவும் நல்லது என்பது உறுதி.

பொலிவான சருமம் :

இளநீரில் கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற கனிமங்களின் கலவை உள்ளன. இந்த அளவு முன்பின்னாக இருந்தாலும், இவைகளில் உள்ள கனிமங்களின் கலவை, ஆரஞ்சு போன்ற பழங்களை விட அதிகமாகவே உள்ளன. ஆகவே சருமம் பொலிவாக மின்னும்.

துளசி



துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.

துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.

தாவரத் தங்கம் – காரட்



தாவரத் தங்கம் என்று நாம் அவ்வப்போது உணவில் பயன்படுத்துகின்ற ஒரு பொருளை அழைக்கிறார்கள். அது எந்தப் பொருள் தெரியுமா? காரட் தான் அது. காரட்டிற்கு தாவரத் தங்கம் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா?

தங்க நகை எப்படி நமது மேனிக்கு பளபளப்பினை தந்து அழகூட்டுகின்றதோ அவ்வாறு காரட்டை நாம் சாப்பிட்டு வந்தால் நமது மேனி பளபளப்பாகும் என்பதனால் தான் காரட்டிற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.

அது மட்டுமல்ல வேறு எந்த காய் கனிக்கும் இல்லாத சிறப்பு குணம் காரட்டிற்கு மட்டுமே உள்ளது. உலகத்தில் இதுவரை மருந்தே கண்டு பிடிக்கப்படாத ஒரு நோய் உண்டென்றால் அது புற்று நோய் (கேன்சர்) தான். அந்த நோய் நமக்கு வராமல் செய்கின்ற ஆற்றல் வேறு எந்த காய் கறிக்கும் கிடையாது. அந்த சிறப்பு குணம் காரட்டிற்கு மட்டுமே உள்ளது. காரட்டில் கரோட்டின் என்கின்ற உயரிய சத்து உள்ளது தான் இதற்கு காரணமாகும். இதனை உயர்வாக சொல்வது என்றால் காரட்டில் பீட்டா கரோட்டின் என்கின்ற நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துகின்ற சத்து உள்ளது என்று சிறப்பித்து விஞ்ஞானிகள் கூறுவார்கள்.

இந்த பீட்டா கரோட்டினின் உள்ள சிறப்பு அணுக் கூறுகள்தான் புற்று நோய்க்கு எதிரியாக இருந்து செயல்படுகின்றது. இந்த சமயத் தில் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். புற்று நோயை வரவிடாமல் செய்கின்ற ஆற்றல் மட்டும்தான் உள்ளதா? இல்லை-புற்று நோய் வந்தவர்களுக்கு குணம் அளிக்கின்ற ஆற்றல் காரட்டில் உள்ளதா? என்று நீங்கள் கேட்கலாம். காரட்டில் புற்று நோயை வரவிடாமல் செய்கின்ற நோய் தடுப்பு ஆற்றல் மட்டுமே உள்ளது.

காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற சத்து வயிறு தொடர் பான எல்லாவித நோய்கள் அனைத்தையும் குணப்படுத்துகின்ற சக்தி பெற்றவை. உதாரணமாக பல காலமாக அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் காரட்டினை நன்கு சாறு பிழிந்து வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டால் போதும் வயிறு மற்றும் குடல் சம்மந்தமான நோய்கள் எல்லாம் குணம் அடைவதுடன் மறுபடியும் இதுபோன்ற பாதிப்புகள் வரவிடாமலும் செய்துவிடும் காரட்.

சிலருக்கு வாயில் எப்போதும் துர்நாற்றம் இருந்து கொண்டே இருக் கும் எத்தனை தடவை பல் துலக்கினாலும் அந்த துர்நாற்றம் சிலரு க்கு போகவே போகாது. அதற்கு காரணம் வாயோ, பற்களோ அல்ல. வயிற்றிலிருக்கும் கோளாறுதான் காரணம். எனவே வயிறு குறைபாட்டை ஒழித்தால்தான் அந்த வாய் துர்நாற்றம் போகும். வாய் துர் நாற்றம் உள்ளவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு இனிப்பான செய்தி இது. வாரம் ஐந்து நாட்கள் மட்டும் காரட் சாறினை சர்க்கரை மற் றும் உப்பு எதுவுமின்றி அருந்தி வாருங்கள். அப்புறம் பாருங்கள் வாய் துர்நாற்றம் போயே போயிந்து என்று நீங்கள் சொல்வீர்கள்.

காரட்டினை வாரத்தில் இரண்டு நாட்களாவது நமது சமையலில் பயன்படுத்துவது உடம்பிற்கு நல்லது. ஏனெனில் காரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியை தருகின்றது. காரட்டினை பச்சையாகவே நிறைய சாப்பிடலாம். பற்களில் கரை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக காரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கரைகள் போய்விடும். உங்களுக்கு தாங்க முடியாத பசியா? எதாவது கிடைத்தால் சாப்பிடலாம் என்று தோன்றுகின்றது… ஆனால் எதுவும் கிடைக்கவில்லை என்கின்ற சூழ்நிலையா? சற்றும் தயங்க வேண்டாம். அருகில் காய்கறி கடை உள்ளதா என்று பாருங்கள். ஒரே ஒரு காரட் வாங்கி பச்சையாக மென்று தின்று பாருங்கள். பசி காணாமல் போய் விடும். காய சண்டிகையின் தீரா பசியைகூட காரட் போக்கி விடும் சக்தி பெற்றது.
* பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.

* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.

* சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

* உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.

* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால், இருமல் உடனே நிற்கும்.

* கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.

* தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.

* பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.

* கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும்.

* அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் ஒழியும்.

* எலுமிச்சம்பழத்தின் சாறை ஓரிரு துளிகள் காதில் விட காது வலிதீரும்.

* குடல்புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவு.

* தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.

* அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.

* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.

சித்த மருத்துவ குறிப்புக்கள்

* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

* இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

* எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.

* ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.

* பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

* அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

* பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

* கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

* நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

* எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

* அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

சாப்பிடும் முறை..!



1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க.

2.எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று சாப்பிடுங்கள்.

3.தொன தொனனு பேசிக் கொண்டு சாப்பிடவேண்டாம்.

4.சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதிங்க.

5.அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்.

6.பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்.

7.பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்.

8.ஆரோக்கிய உணவுகளை சிலர் பிடிக்காமல் வைத்துவிடுவாங்க.. அப்படிசெய்யாமல் சாப்பிட பழகவும்.

9.இரவு உணவில் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்

10.சாப்பாட்டுக்கு பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்.

11.சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும்.

12.சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதிங்க.

நீண்ட ஆயுளுக்கு தேரையர் சித்தரின் அறிவுரைகள்

காடு, மலைகளில் வாழ்ந்த சித்தர்கள் நூற்றாண்டுகளை கடந்தும் வாழ்தார்கள். நோய்கள் அவர்கள் அருகே வர அஞ்சியது. தங்கள் ஆயுள் ரகசியத்தை அவர்கள் சொல்லி இருந்தாலும், நாம் தான் அதன்படி வாழ மறுக்கிறோம். 18 சித்தர்களில் ஒருவரான தேரையார் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு பட்டியலே இடுகிறார்.

மனிதன் எதை மட்டும் செய்ய வேண்டும் என்பதற்கு அவர் இப்படி சொல்கிறார் :

பால் உணவு உட்கொள்ளுங்கள்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது வெந்நீரில் குளியுங்கள்.

படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்து படுங்கள்.

புளித்த தயிர் உணவை விருப்பி உட்கொள்ளுங்கள்.

பசிக்கும்போது மட்டுமே உணவை உட்கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.

இரவில் நன்றாக தூங்குங்கள்.

பெண்ணுடன் மாதம் ஒருமுறை மட்டுமே உறவு வைத்துக்கொள்ள வேண்டும்.

வாழைக்காயை உணவுக்கு பயன்படுத்தும்போது பிஞ்சிக் காய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் . முற்றிய காய்களை கறி சமைத்து உண்ணக்கூடாது.

உணவு உட்கொண்ட உடனேயே சிறிது தூரம் நடக்கும் பயிற்சியை செய்ய வேண்டும்.

6 மாதத்திற்கு ஒருமுறை வாந்தி மருந்து உட்கொள்ள வேண்டும்.

4 மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து சாப்பிடுங்கள்.

1 1/2 மாதத்திற்கு ஒருமுறை மூக்கிற்கு மருந்திட்டு சளி போன்ற நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்துகொள்ள வேண்டும். ( இது ஆண்களுக்கு மட்டும் )

4 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

3 நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மை இட வேண்டும். (பெண்களுக்கு மட்டும்)

விரும்பிய தெய்வங்கள், குருவை வணங்குங்கள்.

இவற்றை எல்லாம் ஒருவர் தனது வாழ்நாளில் பின்பற்றி வந்தால் எமன்
அவரை நெருங்கி வரவே பயப்படுவான் என்கிறார் தேரையார்.

எவற்றை எல்லாம் செய்யக்கூடாது என்பதற்கு தேரையாரின் அறிவுரை :

பகலில் உடலுறவு கொள்வதையும், தூங்குவதையும் தவிர்த்து விடுங்கள்.

கரும்பு போன்ற இனிப்பவர்களாக இருந்தாலும் வயதில் மூத்த பெண்களுடனும் இனிய வாசம் தரும் தலைமுடியைக் கொண்ட விலைமாதர்களுடன் உடலுறவு கொள்ளாதீர்கள்.

காலை இளம் வெயிலில் அலையாதீகள்.

மலம், சிறுநீர் போன்றவற்றை அடக்கி வைத்திருக்காதீர்கள்.

முதல் நாள் சமைத்த கறி உணவு, அமுதம் போன்று இருந்தாலும் அதை மறுநாள் உண்ணவேண்டாம்.

உலகமே பரிசாக கிடைக்கிறது என்ற போதும், பசிக்காத போது உணவு உட்கொள்ளாதீர்கள்.

உணவு உட்கொள்ளும்போது தாகம் அதிகம் எடுத்தாலும், இடைஇடையே தண்ணீர் குடிக்கக்கூடாது.

மயக்கும் மனம் வீசும் கந்தம், மலர்கள் போன்றவற்றை நள்ளிரவு நேரத்தில் நுகரக்கூடாது .

மாத விலக்கான பெண்கள், ஆடு, கழுதை போன்றவை வரும் பாதையில் எழும் புழுதி உடல்மேல் படும்படி நெருங்கி நடந்து செல்லாதீர்கள்.

இரவில், விளக்கு வெளிச்சத்தில் நிற்பவர் நிழலிலும், மர நிழலிலும் நிற்பதை தவிர்த்திடுங்கள்.

பசியின் போது உணவு உட்கொண்ட உடனேயும் உடலுறவு வைத்துக்கொள்ளாதீர்கள்.

மாலை நேரத்தில் தூங்குதல், உணவு உட்கொள்ளுதல், அளவுக்கு மீறிய காமச் செயல்களில் ஈடுபடுதல், அழுக்கான ஆடை அணிந்திருத்தல், தலையை வாரி முடி உதிரச்செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.

மற்றவர்கள் கை உதறும்போது அவர்களது நகத்திலிருந்து விழும் தண்ணீரும், குளித்து தலை துவட்டும் போது உதிரும் தண்ணீரும் மேலே தெரித்து விழும் இடத்தில் நடக்காதீர்கள்.

-இப்படி சொல்கிறார் அவர்.

தேரையார் சித்தர் கூறிய அனைத்தையும் ஒரே நாளில் பின்பற்றுவது என்பது இயலாத காரியம். ஏனென்றால், நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கை அப்படி. அதனால், படிப்படியாக முயற்சிப்போம். நோய், நொடியின்றி நாளும் நலத்தோடு வாழ்வோம்.