Wednesday, January 29, 2014

முடி அடர்த்தியாக வளர.... இய‌ற்கை வைத்தியம்,



பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை பல்வேறு விதமான அலங்காரங்களுக்கு உட்படுத்துகின்றனர். முடியை கலர் செய்வது, ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை அலங்கரித்துக் கொள்கின்றனர். அவற்றின் போது சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது.

மேலும் எமது சுழலில் உள்ள தூசு துணிக்கைகள் மற்றும் வளியில் கலந்துள்ள நச்சு வாயுக்கள் போன்றவற்றாலும் கூந்தல் பாதிப்படைகின்றது. அது போன்ற பாதிப்பை வேலைக்குச் செல்லும் பெண்களே அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. தலை முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதே என இனி கவலைப்பட தேவையில்லை. தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்..........

1.ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

3.செம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

4.கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

5. கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.

6.வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.

7.ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.

8.மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும். எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும். மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது. ஷாம்புக்கள் பயன்படுத்தும் போதும் இதே போல் செய்ய வேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும்.

9.செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

10.கருவேப்பிலை, சின்ன வெங்காயம் -4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்



* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்

* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும்.

* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.

* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.

* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.

* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளரத் தொடங்கும்.

ஆப்பிள் கன்னங்கள் பெறுவதற்கு சில டிப்ஸ்.



முகத்தின் அழகை இன்னும் அழகாக்குவது செழுமையான கன்னங்கள். ஆப்பிள் போல் கன்னங்கள் இருந்துவிட்டால் அழகோ அழகு. ஆப்பிள் கன்னங்கள் பெறுவதற்கு சில டிப்ஸ்.

தோலுக்குத் தேவையான எண!ணெய்ப் பசை இல்லாதபோது, கன்னப்பகுதியும் வறண!டு, சுருங்கி சப்பிப்போய் காணப்படும்.

* தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப் பருப்பு, முந்திரிப் பருப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசிவிட்டு, மீதி மூன்று பருப்பையும் சாப்பிட வேண!டும். தோலில் எண!ணெய்ப் பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச் சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதை போட்டு கன்னம் தங்கம் போல் மின்னும்.

* மூன்று ஆப்பிள் துண!டுகள், மூன்று கேரட் துண!டுகள் இவற்றை துருவி ஜூஸ் செய்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், கன்னத்தில் சதை போட்டு கன்னத்தின் நிறம் மற்றும் பளபளப்பு கூடும்.

* ஒரு கப் பாலில், ஒரு டீஸ்பூன் வெண!ணெய், ஒரு டீஸ்பூன் தேன், இரண!டு துண!டு சீஸ், ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து கலந்து தினமும் காலையில் சாப்பிடுவதுடன், ஒரு கப் ஆரஞ்சு (அ) ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தாலே போதும். சதைப் பிடிப்புடன் அழகான கன்னம் எழும்.

* அன்றாட உணவில் பால், சீஸ் மற்றும் நீர்ச்சத்தான ஆகாரங்களை உண!ணாததும் கன்னம் ஒட்டிப் போவதற்கு ஒரு காரணம். இதனால், சருமம் வறண!டு, உதடுகளும் வெடிப்புக்கு உள்ளாகும். தினமும் உணவில் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப் பருப்பு, முந்திரிப் பருப்பு, உலர்ந்த பழங்கள் மற்றும் நிறைய தண!ணீர் சேர்த்துக் கொண!டால் செழுமையான கன்னங்களை பெறலாம்.

* தினமும் குளிப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் வெண!ணெயுடன் சிறிது சர்க்கரை கலந்து கன்னங்களில் தேய்த்து வர, ஒட்டிய கன்னங்கள் உப்ப ஆரம்பிக்கும்.

* நல்லெண!ணெய் (அ) தேன் ஒரு டீஸ்பூன் எடுத்து, வாயில் போட்டுக் கொப்பளிப்பது, ஒட்டிய கன்னம் உள்ளவர்களுக்கான பயிற்சி.

* ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து காது வரை அப்பி, தினமும் „பேஷியல் ஸ்ட்ரோக்… கொடுத்து வந்தால், ஒரே வாரத்தில் அழகான கன்னத்தை பெறலாம்.

* ஒரு டீஸ்பூன் தேனுடன், அரைத்த பப்பாளி விழுது ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, பத்து நிமிடம் பேக் போட்டு கழுவவும். தேன், சருமத்தின் சுருக்கங்களைப் போக்கி, கன்னத்தை பளபளப்பாக்கும்.

* பால் - 1 டீஸ்பூன், வெண!ணெய் - 1 டீஸ்பூன், பார்லித்தூள் - 1 டீஸ்பூன் ஆகியவற்றை ஒரு சிறிய கிண!ணத்தில் எடுத்து நுரை வரும் வரை நன்கு அடித்துக் கலக்கவும். அப்போது கிடைக்கும் கிரீமை, முகம், கழுத்து, கண!களைச் சுற்றி என அனைத்துப் பகுதிகளிலும் பூசவும். அரை மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும். உங்கள் கன்னம் வெண!மைப் பொலிவுடனும் மற்றும் முகம் மினுமினுப்புடன் பிரகாசிப்பதை காணலாம்.

Sunday, January 12, 2014

பித்தத்திலிருந்து விடுதலை பெற...இயற்கை வைத்தியம்:-



* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

* இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

* எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.

* ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.

* பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

* அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

* பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

* கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

* நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

* எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

* அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

இஞ்சிப்பால்

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?

நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்

நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்

இன்றைய இளைய தலைமுறையினரை அதிகமாக பாதித்திருக்கும் பிணி இது. எழுதினால் கை நடுங்கும். எதை எடுத்தாலும் ஒரு தடுமாற்றம், அடிக்கடி களைப்பு, சோர்வு, தூக்கமின்மை இவைகள் முக்கிய அறிகுறிகளாகும். நரம்புத் தளர்ச்சி ஏற்பட்ட பெண்கள் மிகவும் பாதிக்கப் படுகின்றார்கள். அடிக்கடி அழுவதும், சிரிப்பதும், பயித்தியம் போல் நடப்பதும் உண்டு.

எளிதில் சீரணமாகக் கூடிய உணவு வகைகள் காலை மாலை உணவுடன் இனிப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளுதல் நல்ல உடைகள், வாசனைப் பொருட்கள் கொள்ளுதல் பூந்தோட்டங்களில் கடற்கரையில் உலாவுவது என அவர்கள் மனோ நிலை எப்போதும் சந்தோஷ சூழலில் வைத்திருப்பது அவசியம்.
அன்பும், அரவணைப்பும் அவர்களுக்கு ஆறுதல் தரும்.

சித்த மருந்து..

அமுக்கிராக் கிழங்கு - ஐந்நூறு கிராம்.
மிளகு - இருபத்தி ஐந்து கிராம்.
சுக்கு - இருபத்தி ஐந்து கிராம்.
அதிமதுரம் - இருபத்தி ஐந்து கிராம்.
ஏல அரிசி - இருபத்தி ஐந்து கிராம்.
சாதிக்காய் - இருபத்தி ஐந்து கிராம்.
தேன் - ஒரு கிலோ.
பால் - அரை லிட்டர்.

அமுக்கிராக் கிழங்கை நன்றாக இடித்துக் கொள்ளவும்.ஒரு மண் சட்டியில் பாலை ஊற்றவும்.நல்ல ஒரு வெள்ளைத் துணியால் பானையின் வாயை கட்டி இடித்து வைத்துள்ள அமுக்கிராக் கிழங்குப் பொடியை துணியின் மேல் பரப்பி பானையின் மூடியால் பொடியை மூடி சுமார் முப்பது நிமிடங்கள்
சிறு நெருப்பில் அவித்து எடுத்துக் கொள்ளவும்.

இரண்டு மணி நேரம் நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்துக் கொள்ளவும்.

மற்ற மருந்துகளை தனித்தனியாக் இடித்து சலித்து மேற்கண்ட அளவில் எடுக்கவும்.

எல்லா பொடிகளையும் நன்கு கலக்கிக் கொள்ளவும்.

ஒரு கிலோ தேனை ஒரு சட்டியில் ஊற்றி [ சிறிய தணலில் ] மேற்கண்ட எல்லாப் பொடிகளையும் சிறிதுசிறிதாகக் கொட்டி நன்கு கிளறி கிண்டி வைக்கவும்

உண்ணும் முறை ; -

காலை உணவு உண்டு ஒரு தேக்கரண்டி அளவும் இரவு உணவிற்குப் பின்னர் ஒரு தேக்கரண்டி அளவும் உட்கொண்டு பால் அருந்தவும்.

நாற்பத்தெட்டு நாட்கள் உண்ண வேண்டும்.

பத்தியம் ; -

குளிர்ந்த பானங்கள், மீன், கருவாடு போன்ற அசைவ உணவுகளை அறவேத் தவிர்க்கவும்.

Sunday, January 5, 2014

கீரைகள்

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கீரைகள் :
************************************

உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் அள் ளித்தரும் முருங்கைக் கீரை, அரைக் கீரை, சிறு கீரை, முளைக் கீரை, பொன்னாங் கண் ணிக் கீரை, மணத்தக்காளிக் கீரை ஆகிய ஆறு வகையான கீரைகளைப் பற்றி இங்கு சுருக்க‍மாக பார்ப்போம்.

முருங்கைக் கீரை:

இதை நெய்யில் பொரியல் செய்து உணவி ல் சேர்த்து வந் தால் நாளடைவில் ஆண்களுக்கு வாலிபமும், வீரியமும்,

தாது விருத்தியும் உண்டாகு ம் இதை உணவில் 40 நாட்கள் சாப்பி ட்டால் இல்லற வாழ்க் கையில் இன்பம் உண்டாகு ம். மேலும் இரத்தசோகை யை தடுக்கும், இரத்த விருத் தியை உண் டாக்கும்.

அரைக்கீரை:

இதை சாப்பிட்டுவர பித்தம் தொட ர்புடைய அனைத்து வியா திகளும் குணமடையும். அதிகளவில் சிறு நீர் இறங்குவதை, கட்டுப்படுத்தி இரத்த பிரமேகம் என்னும் வியாதி யைக் குணப்படுத்த வல்லது.

சிறு கீரை:

சிறுகீரையைப் பற்றி தெரியாதவர் யாருமில்லை. சிறுகீரை செம்புச்சத் தும், உஷ்ணவீர்யமும் உடையது. கு டல், இருதயம், மூளை, ரத்தம் இவை களுக்கு நல்ல வலிமையை தரும். சிறுகீரையை அன்றாட உணவில் சேர் த்துக்கொண்டு வந் தால் இருதய வியாதிகள் போகும்.

முளைக்கீரை:

முளைக்கீரையை உண்ணுவ தால் சொறி, சிரங்கு, நரம்பு தள ர்ச்சி குணமடையும். எலும்பு வளர்ச்சியடையும், மாலைக் கண் பார்வை குறைவு நீங்கும். அஜீரணக்கோளாறு, வயிற்றுப் புண் சரியாகும்.

பொன்னாங்கண்ணிக் கீரை:

பொன்னைக் காடுத்து, பொன்னாங்கண்ணி வாங்குஎன்று பழமொழி உண்டு. இக்கீரை கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்க ளையும் குணமாக்க வல்லது. இக்கீ ரையை வெண்ணெய் சர்த்து உண் ண கண் சம்பந்தப்பட்ட 96 வியாதி கள் நீங்கும் இக்கீரையை உண்பதா ல் வாய்ப்புண், வாய் நாற்ற ம், ஈரல் நோய், மூலச்சூடு, கைகால் எரிவு, உலர்த்து மேகம்,வள்ளை வயிற்றெரிச்சல், வாத தோடம், தேகச்சூடு முதலிய வியாதி கள் நீங்கும்.