Monday, October 28, 2013

தலைவலிக்கே இது தலைவலி!

தலைவலியை சரிசெய்யும் ஆரோக்கியமான இயற்கை உணவுகள்:-

நிறைய பேருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். அவ்வாறு தலைவலி வந்தால், அதனை தாங்கிக் கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. இத்தகைய தலைவலி ஏற்படுவதற்கு காரணம், உடல் வறட்சி, தூக்கமின்மை, அதிகமான வேலைப்பளு, மன அழுத்தம், ஆல்கஹால் அருந்துவது போன்றவை. மேலும் ஒரு சில சத்துக்கள் குறைபாடும் தலைவலியை உண்டாக்கும். சிலர் தலைவலி வந்தால், உடனே மாத்திரைகளை போடுவார்கள். அவ்வாறு எப்போது தலை வலி வந்தாலும், மாத்திரைகளைப் போடும் பழக்கத்தை கொண்டால், பின் அது பழக்கமாகி, உடலுக்கு கேடு விளைவிக்கும். எனவே அவ்வாறு மாத்திரைகளை போட்டு, தலைவலியை குணமாக்குவதை விட, அவற்றை ஏற்படுத்தும் செயல்களை தவிர்த்து, தலைவலியை சரிசெய்யும் ஆரோக்கியமான உணவுகளை மேற்கொண்டு வந்தால், தலை வலியை குணமாக்குவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு சாப்பிட்டால், தலை வலியை சரிசெய்யலாம். அதிலும் ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் தலைவலியை குணமாக்கும். பொதுவாக ஆல்கஹால் அருந்தினால், சிறுநீர் அடிக்கடி வரும், இதனால் உடலில் வறட்சி ஏற்பட்டு, உடலுக்கு அவசியமான சத்தான பொட்டாசியம் வெளியேறிவிடும். இத்தகைய பொட்டாசியம் உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. எனவே தலை வலி இருக்கும் போது, உருளைக்கிழங்கை தோலோடு சாப்பிட்டால், வாழைப்பழத்தை விட அதிகப்படியான பொட்டாசியத்தை பெறலாம்.

தர்பூசணி

உடலில் வறட்சியினால் தலை வலி வரும். எனவே தலை வலியின் போது மாத்திரைகளை சாப்பிடுவதை விட, நீர்சசத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களான தர்பூசணியை சாப்பிடலாம். அதிலும் தர்பூசணியில் நீர்ச்சத்து மட்டுமின்றி, மக்னீசியம் சத்தும் அதிகம் உள்ளது. மக்னீசியம் அதிகம் உள்ள உணவுகளை உண்டாலும், தலைவலியை குறைக்கலாம்.

கோப்பி

ஆம், தலை வலியின் போது கோப்பி குடித்தால், தலை வலி போய்விடும். ஏனெனில் தலைவலிக்கும் போது உட்கொள்ளும் மாத்திரைகளில் காப்ஃபைன் இருப்பதால் தான் தலைவலி குணமாகிறது. ஆகவே தலை வலிக்கும் போது காப்ஃபைன் அதிகம் உள்ள காபியை குடித்தால், தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

கோதுமை பாண்

கார்போஹைட்ரேட் உடலில் குறைவாக இருந்தாலும், தலை வலி உண்டாகும். எனவே காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சேர்க்க வேண்டும். அதற்கு போதுமை பாண் பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இதனால் உடலில் உள்ள செரோட்டின் உற்பத்தி அதிகமாகி, மனநிலையும் நன்கு இருக்கும்.

பாதாம்,

நிறைய ஆய்வுகளில் பாதாமில் இருக்கும் மக்னீசியமானது தலைவலிக்கு சிறந்த தீர்வைத் தரும் என்று சொல்கிறது. எனவே ஒற்றைத் தலை வலியால் பாதிக்கப்பட்டவர்கள், மக்னீசியம் உணவுகளை சாப்பிட்டால், நல்லது. அதற்கு பாதாம், வாழைப்பழம், அவகேடோ போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

காரமான உணவுகள்

தலைவலியின் போது கார உணவுகளை சாப்பிட்டால், தலை வலியானது சீக்கிரம் பறந்து போய்விடும்

தயிர்

தலை வலியின் போது கால்சியம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் தலை வலி குணமாவதோடு, உடலில் ஏற்படும் கால்சியம் குறைபாட்டை தடுக்கலாம்.

எள்

எள்ளில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆகவே இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதோடு, கடுமையான தலை வலியும் போய்விடும். மேலும் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். இவற்றில் மக்னீசியமும் அதிகம் உள்ளது.

பசளிக்கீரை

பசளிக்கீரை உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, தலைவலியையும் குறைக்கும். எனவே தலை வலிப்பது போல் இருந்தால், அந்த நேரம் சாலட் செய்து, அதில் லெட்யூஸ் பயன்படுத்துவதற்கு பதிலாக பசளிக்கீரை யைப் பயன்படுத்தலாம். இதனால் தலை வலியைக் குறைக்கலாம்.

No comments:

Post a Comment