Showing posts with label கண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க. Show all posts
Showing posts with label கண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க. Show all posts

Wednesday, April 2, 2014

கண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க

கண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க இய‌ற்கை வைத்தியத் தகவல்.
பெண்கள் கண்ணுக்கு கீழ் கருவளையம் தோன்றி அவர்களின் அழகை கெடுக்கிறது. இவர்களை அழகு தேவதைகளாக மாற்றுவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான். ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள்.
இமைகளின் மேல் கலவையைப்பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும். பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை.
இதனால் கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டியது போல் கருவளையம் தோன்ற விடும். இதனை தக்காளிப் பேஸ்ட்டால் விரட்டி விடலாம்.