Showing posts with label சளித்தொல்லையா இத படிங்க. Show all posts
Showing posts with label சளித்தொல்லையா இத படிங்க. Show all posts

Monday, October 28, 2013

சளித்தொல்லையா இத படிங்க

சளித்தொல்லை நீங்க சிறந்த மருந்து இயற்கை மருந்து!!!

* எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.எலுமிச ்சை பழச்சாற்றை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி தீரும். எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

* கடல் அழிஞ்சில் பட்டை, திப்பிலி, தாளிசபத்திரி மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் பொடியை தினமும் இரண்டு வேளை தேனில் குழைத்து சாப்பிடலாம். சளி, இருமல், தும்மல் மற்றும் அலர்ஜியில் இருந்து தீர்வு கிடைக்கும்.

* கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும். அரைக் கீரை தண்டுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில் குடித்தால் சளி, இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வுகிடைக்கும்.

* அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி குணமாகும். ஆடாதொடா இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லை தீரும்.ஆலமர விழுதை பொடி செய்து காலை, மாலையில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.