Showing posts with label பழைய சோற்றின் மகிமை. Show all posts
Showing posts with label பழைய சோற்றின் மகிமை. Show all posts

Friday, November 15, 2013

பழைய சோற்றின் மகிமை

ஆற்று நீர் வாதம் போக்கும்
அருவி நீர் பித்தம் போக்கும்
சோத்து நீர் இரண்டையும் போக்கும்.
-சித்தர் தேரையர்

எம் முன்னோர்களும், தற்காலத்தில் தாயகத்தில் வாழ்வோரும் தங்கள் காலை உணவாக சாப்பிடும் உணவுதான் பழஞ்சோறு. பழஞ்சோற்றுடன் எஞ்சியிருந்த கறிகளையும் சேர்த்துப் பிரட்டி சாப்பிடும் போது ஒரு தனி ருசியை உணர்ந்து கொள்ளலாம். கறி இல்லாத விடத்து அதனுடன் வெங்காயம், பச்சமிளகாய், ஊறுகாய், தயிர் என்பனவற்றை சேர்த்து திரணையாகவோ அல்லது நீர் ஆகாரமாகவோ அருந்தி உற்சாகமாகவும், தைரியசாலிகளாகவும், பலகாலம் சுகதேகிகளாக உயிர் வாழ்ந்துள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தி, உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல், எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய. பழஞ்சோறும் தொட்டுக் கொள்ள வெண்காயமும் சேர்த்துச் சாப்பிடுங்கள்.

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்க மருத்துவர்.

தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

"காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".

பழைய சாதத்தை எப்படி செய்வது? (அது சரி!)

பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது புளுங்கல் அரிசி என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.

ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.) மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!

ஏனைய நாட்களைவிட திருமணவீடுகள், சடங்கு நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் என எப்போதாவது உங்கள் வீட்டில் விருந்து நடந்தால் எதை மறந்தாலும் மறுநாள் பழஞ்சோற்றை சாப்பிட மட்டும் மறந்து விடாதீர்கள், அங்குதான் பல கறிகளும் நிறைய சோறும் மிஞ்சியிருக்கும், ஆட்களும் அதிகமாக இருப்பார்கள். எல்லோரும் சுற்றிவர இருந்து வெங்காயத்தை கடித்தபடி பழஞ்சோறு சாப்பிடும் அந்த சுவையும் மகிழ்ச்சியும் வார்த்தைகளால் சொல்லி விபரிக்க முடியாதவை.