Sunday, November 10, 2013

பல் பராமரிப்பு

பல் பராமரிப்பு மிகவும் அவசியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் :-


பற்களை மிக நன்றாக பராமரித்தால் அது நமக்கு பல விதங்களில் நன்மையைத் தரும்.

பற்களில் சொத்தை ஏற்பட்டு பிடுங்கும் அவதி ஏற்படாது. பற்களை பிடுங்குவதால் சில உணவுகளை நம்மால் சுவைக்க முடியாமல் போவதில் இருந்து தப்பிக்கலாம். பற்களை இழப்பதால் அழகான தமிழை உச்சரிக்க முடியாமல் போகும்.

நமது முக அழகுக் கெடும். எனவே பற்களைக் காப்பது மிகவும் முக்கியம்.

மிகவும் மிருதுவான தன்மைக் கொண்ட பிரஷ்களைப் பயன்படுத்த வேண்டும்.

பொதுவாக வட்ட வடிவிலான பிரஷ்கள் நல்லது.

3 மாதங்களுக்கு மேல் பிரஷ்களைப் பயன்படுத்தக் கூடாது.

பற்களை நாம் எப்போதும் தேய்ப்பது போல நீளவாக்கில் தேய்க்காமல், குறுக்காக அல்லது வட்ட வடிவில் தேய்க்க வேண்டும்.

பற்களை சுத்தப்படுத்துவது என்பது வெறும் பற்களைத் தேய்ப்பதோடு நிறைவடைவதில்லை.

நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும். பல சமயங்களில் வாய் துர்நாற்றத்திற்கு நாக்கில் படியும் கிருமிகளேக் காரணமாக அமைகின்றன.

எப்போதுமே பற்களை நிதானமாக சுத்தப்படுத்துங்கள். அவசர அவசரமாக தேய்ப்பது பற்களை சுத்தப்படுத்துசேதப்படுத்திவிடும்.

ஒரே நிலையில் பற்களைத் தேய்க்காமல், எல்லா பற்களையும் சுத்தப்படுத்தும் வகையில் ஒவ்வொரு பற்களுக்கும் சில நிமிட நேரம் ஒதுக்கி தேய்த்து நன்கு வாயைக் கொப்பளிக்க வேண்டும.

பற்களை முழுமையாக சுத்தப்படுத்த பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றை பல் மருத்துவரிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment