Sunday, February 2, 2014

தாமரை பூவின் மருத்துவ குணங்கள் :-


தாமரையில் வெண்தாமரை, செந்தாமரை, ஆகாயத்தாமரை, கல்தாமரை எனப் பலவகை உண்டு. இதில் வெண் தாமரைப்பூவே மிகுந்த மருத்துவக்குணம் உடையது.

உடல் வெப்பத்தினால் ஏற்படும் கோளறுகளைத் தணிப்பதே இதன் தனித்தன்மை. உஷ்ணத்தினால் கண் சிவக்கிறதா? கண்ணீர் வடிகிறதா? தாமரைப் பூவைப் பசும்பாலில் போட்டுக் காய்ச்சி இறக்கி, அந்த ஆவியை விழிகளைத் திறந்து கொண்டு பிடித்தல் கண் தெளிவடையும்.

அஜீரணத்தால் ஏற்படும் பேதி, ஈரல்நோய், சீதபேதி போன்ற வயிற்று நோய்களுக்கு இந்த பூவின் சாறு குணமளிக்கும்.

கர்ப்பிணிகளுக்குத் தாமரைப் பூ மிகவும் நல்லது. 8வது மாதத்தில் பசி மந்தம் ஏற்படும்போது, தாமரைப்பூவுடன் நெய்தறக்கிழங்கையும் சேர்த்து அரைத்துப் பசும்பாலில் கலந்து கொடுத்தால் நன்றாக பசி எடுக்கும்.

தாமரைப் பூவிற்கு மூளையைச் சுறுசுறுப்பாக்கும் ஆற்றலுண்டு. இதனைக் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் மூளை பலப்படும். அறிவு பிரகாசமடையும் அத்துடன் நரை திரை மாறும்.

106 டிகிரி காய்ச்சல் வந்து அனல் வீசும் நிலையா? தயங்காமல் தாமரைப்பூ கஷாயம் கொடுங்கள் கொஞ்ச நேரத்தில் நன்றாக வியர்த்து ஜுரம் இறங்கும்.

தாமரைப்பூ கஷாயத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக்கொதிப்பு நோய் அடங்கும். இந்நிலையில் உணவில் அரை உப்புதான் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment