Sunday, February 2, 2014

வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :-நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே சில மருத்துவ குணங்கள் உண்டு. அதை அறியாமல், அந்தப் பொருட்களின் மருத்துவ குணங்கள் தெரியாமல் கிடைக்கும்போது மட்டுமே பயன்படுத்துகிறோம். அதைத் தேடிப்போவதை நாம் விரும்புவதில்லை. அதற்கு நமது அவசரக் காலம் ஒரு காரணமாகிறது. சில நோய்களை உணவாலேயே சரிப்படுத்திவிட முடியும். இவற்றைப் பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம்.

* தினமும் சாப்பாட்டிற்குப் பின் ஒரு தக்காளிப்பழம் சாப்பிடுவதால் ஜீரண சக்தி உண்டாகும். உண்ட உணவு எளிதில் செமிக்கும். மேலும், வயிற்றில் உண்டாகும் வாயுத் தொல்லையும் கட்டுப்படும்.

* வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடற்சூடு கட்டுப்படுத்தப்படுகிறது. வறட்டு இருமலுக்கு மிகவும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வெண்டைக்காயில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

* சிறிய வெங்காயம் நான்கு எடுத்து, அவற்றின் தோலை உரித்துவிட்டு, நன்கு மென்று சாப்பிட்டுவிட்டு, சூடாக ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் எத்தகைய ஜலதோஷமும் நீங்கிவிடும்.

* பொன்னாங்கண்ணிக் கீரையைப் பூண்டு போட்டு வேகவைத்து, கடைந்து சாப்பாட்டுடன் சாப்பிட்டு வந்தால், மூலநோயால் அவதிப்படுபவர்கள் நோய் நீங்கிக் குணமடைவார்கள்.

* புதினா இலையினை அரைத்துச் சாறெடுத்து இரவில் படுக்கப்போகுமுன் முகத்தில் தேய்த்து, காலையில் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். வேறு எந்தக் கிறீமோ, லோஷனோ முகத்திற்குத் தேவையில்லை. பருக்களும் முகத்தில் ஏற்படாது.

* நீரில் சிறிதளவு டெட்டாலுடன் சிறிதளவு உப்பையும் கலந்துவிட்டு, பிறகு அத் தண்ணீரினால் குழந்தைகளைக் குளிப்பாட்டினால் எந்தவிதமான தோல்வியாதியும் குழந்தைகளை நெருங்காது.

* பச்சை வெங்காயத்தை அரிந்து தயிரில் போட்டு இரவு படுக்கப்போகுமுன் சாப்பிட்டால் நிம்மதியான உறக்கம் வரும்.

•அன்னாசிப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டால், உடலில் ஏற்படும் வலிகளும் மற்றும் கை, கால்களில் ஏற்படும் மூட்டுவலியும் நீங்கிவிடும்.

* இரண்டு வெற்றிலையுடன், இரண்டு கராம்பு, ஒரு துண்டு சுக்கு வைத்து பால் தெளித்து நைஸாக அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் கடுமையான தலைவலி நீங்கும்.

* அறுகம்புல் சாற்றை அடிக்கடி பருகி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். வயிற்றுப்புண், குடல்புண் குணமாகும்.

* சிறு குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை வேப்பங்கொழுந்தை உப்பு சேர்த்து அரைத்து உண்ணக் கொடுத்தால் வயிற்றில் பூச்சித் தொல்லை இராது.

* இரவில் தூங்காமல் தொந்தரவு செய்யும் குழந்தைகளுக்குப் படுக்கப் போகுமுன் அரை ஸ்பூன் அல்லது ஒரு ஸ்பூன் தேன் கொடுத்தால் நன்றாகத் தூங்குவார்கள்.

* தினமும் 50 கிராம் அளவு அல்லது ஒரு துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். மலம் நன்றாக வெளியேறி வயிறு சுத்தமாகும்.

* பழவகைகளுள் பேரிக்காயை யாரும் அவ்வளவாக விரும்பிச் சாப்பிட மாட்டார்கள். ஆனால், பேரிக்காய் இதயத்துக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தியை உண்டாக்கும். நிறைமாதக் கர்ப்பிணிகள் பேரிக்காயைச் சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும்.

* முள்ளங்கியை அடிக்கடி சமையல் செய்தோ பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் வாதநோய் நீங்கும். இருமல், கபம், குடல் சம்பந்தமான நோய்களுக்கும் முள்ளங்கி ஒரு சிறந்த மருந்தாகும்.

* இரவு படுக்கும் முன் சிறிதளவு விளக்கெண்ணெயைக் கண் இமைகளில் தடவி வந்தால், கண்கள் கவர்ச்சிகரமாய் மாறிப் பளீரென்று ஒளியுடன் திகழும், சுருக்கம் விழாமலிருக்கும்.

* சிறிதளவு வெந்தயத்தை ஊறவைத்து, அரைத்து, தலையில் தேய்த்து நன்றாக ஊறிய பின் குளித்தால், முடி உதிர்வது நின்றுவிடும்.

* பாசிப்பயறு மாவுடன் சந்தனத்தைக் கலந்து தினமும் இரவில் முகத்தில் பூசிக்கொண்டு படுத்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

* எலுமிச்சம்பழத்தின் தோலைக் காயவைத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு அவ்வப்போது சிறிதளவு ரசத்தில் சேர்த்தால் ரசம் மணக்கும். மேலும் இப்பொடியுடன், உப்பு, புதினாப்பொடி சேர்த்துப் பல் பொடியாகவும் பயன்படுத்தலாம். ஈறுகளுக்கு மிகவும் நல்லது.

* ஆரஞ்சுப் பழத்தின் தோலை நன்றாய்க் காயவைத்து எடுத்துக்கொண்டு தினமும் இரவில் கொசுவத்தி போல் கொளுத்தி வைத்தால் கொசுக்கள் நம் வீட்டிற்குள் வாராது

No comments:

Post a Comment