Monday, December 23, 2013

உடல் எடை குறைய



சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத்தொல்லையே இருக்காது.

அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.

நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகிவிடும்.

மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வரவேண்டும்.

கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் ‌வீ‌க்க‌ம் குறையும்.

பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வை‌த்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.

தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் உண்ண வேண்டிய உணவுகள்:-

இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களில் கலோரி குறைவு. அவைகளை சாப்பிடுவது நல்லது. தினமும் நீங்கள் சாப்பிடும் உணவில் 80 சதவீதம் வீட்டு உணவாக இருக்க வேண்டும். 20 சதவீதம் வெளி உணவாக இருக்கலாம். பேக்கரி உணவுகளில் கலோரி அதிகம். அதில் சேர்க்கப்படும் வனஸ்பதியில் இருக்கும் டிரான்ஸ்பாற்றி ஆசிட் கொழுப்பை அதிகரித்து உடலை குண்டாக்கும்.

- நார்ச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். காய்கறி, பழங்கள், தானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பிஸ்கெட், மைதா, வெள்ளை அரிசி உணவுகளை முடிந்த அளவு தவிர்த்திடுங்கள்.

- ஒரு உணவை சாப்பிடும் முன்பு அது ருசியா என்று மட்டுமே பார்க்கிறோம். அது ஆரோக்கியமானதா என்று பார்க்க பழகிக்கொள்ளுங்கள். – மாலை நேரத்தில் இனிப்பு, காரத்திற்கு பதில் காய்கறி- பழ சாலட் சாப்பிடுங்கள். மோர் பருகுங்கள்.

- ஐஸ்கிரீம், கொழுப்புள்ள பால், கேக் வகைகளை தவிர்த்திடுங்கள்.

- முடிந்த அளவு வீட்டு வேலைகளை செய்யுங்கள். வாரத்தில் நான்கு நாட்களாவது 45 நிமிடங்கள் வேகமான நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

இதை கடைபிடித்தால் எடை குறைந்து-இடை மெலிந்து ஆரோக்கியமாக வாழலாம்!

No comments:

Post a Comment